Home இரகசியகேள்வி-பதில் தாம்பத்தியம் அவசியம்தானா? அதற்கு நான் எவ்வாறு தயா ராகவேண்டும்? உறவில் நான் என்ன செய்யவேண்டும்?​

தாம்பத்தியம் அவசியம்தானா? அதற்கு நான் எவ்வாறு தயா ராகவேண்டும்? உறவில் நான் என்ன செய்யவேண்டும்?​

73

கேள்வி: நான் ஒரு ஆண். வயது 34. திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியுடன் உறவு கொள்கையில் விரைவாகவே விந்து வெளியாகிவிடுகிறது.

மேலும் சிறுநீர் கழித்த ஓரிரு நிமிடங்களின் பின் சில துளிகள் சிறுநீர் வெளியாகிறது. இது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. வைத்தியரிடம் செல்லவும் சங்கடமாக இருக்கிறது.

இதற்கு தீர்வு தரவேண்டும்.

பதில்: திருமணமான ஆண்களில் பலருக்கும் உள்ள பிரச்சினைதான் விந்து முந்துதல்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உங்களது பணியிடச் சூழல், வாழ்க்கை நிலை, உட்கொள்ளும் உணவு என்று பல கார ணங்கள் இருக்கின்றன.

இதற்கு மருந்துகள் ஏதும் இல்லை. உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

உறவில் நீங்கள் உச்சநிலையை அடையும் முன்னதாக சிறு இடைவெளி விடுவதன் மூலம் உறவை இன்னும் நீளப்படுத்தலாம்.

உங்களது சிறுநீர் பிரச்சினையைப் பொறுத்தவரை உங்களது சிறுநீர் தாரையில் ஏதேனும் சிறு பிரச்சினை இருக்கலாம்.

இதுபோன்ற பிரச்சினைகளை நிச்சயமாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறத்தான் வேண் டும்.

தயங்கிக்கொண்டிருந்தால் பிரச்சினை பெரிதாகி விடலாம். எனவே உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————-
கேள்வி: நான் 22 வயதுப் பெண். எனக்கு வீட்டில் திரு மணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள்.

திருமண வாழ்க்கையில் தாம்பத்தியம் அவசியம்தானா? அதற்கு நான் எவ்வாறு தயா ராகவேண்டும்? உறவில் நான் என்ன செய்யவேண்டும்?

பதில்: திருமணத்தின் அடிநாதமே குழந்தைப்பேறுதான். அப்படியிருக்கும்போது தாம்பத்தியத்தை எப்படித் தவிர்ப்பது?

அப்படித் தவிர்க்க விரும்பினால் திருமணத்தையே தவிர்த்துவிட வேண்டும். திருமணம் என்பது தாம்பத்தியம் மட்டும் அல்ல என்றாலும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் குடும்ப உறவின் மற் றைய கூறுகள் வெளிப்படுகின்றன.

தாம்பத்தியத்துக்கு நீங்கள் தயாராவதற்கு கற்பனை யிலும் யதார்த்தத்திலும் சில விடயங்களைச் செய்ய வேண் டும்.

கற்பனை என்று பார்த்தீர்களானால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணமகனை, திருமணத்துக்கு முன்னிருந்தே உங்கள் கனவுகளில் சஞ்சரிக்கச் செய் யுங்கள். அவருடன் தொலைபேசியில் கதைப்பதன் மூலம் உங்கள் கற்பனைக்கான அடிப்படை விடயங்கள் கிடைக்கும்.

அவருடன் கலவியில் ஈடுபடுவது வரை நீங்கள் கற்பனையில் லயிக்கலாம். இதன்மூலம், முதல் உறவு தொடங்கும் முதல் இரவின்பால் உங்களுக்கு ஒரு ஈடு பாடு அதிகரிக்கும். (உங்களது கேள்வியில் இருந்து கலவி குறித்த ஆர்வம் உங்களுக்குச் சற்றுக் குறைவாக இருப்பதுபோல் தெரிகிறது. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு)

உடலளவில், உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக்கொள்வதன் மூலம் உங்களை நீங்கள் உறவுக்குத் தயார் செய்யலாம்.

முக்கியமாக தலைமுடி தவிர்ந்த ஏனைய உரோமங்களைக் களைந்து சுத்தமாக வைத்திருப்பதும், முத லிரவுக்கு நாள் குறிக்கையில் உங்களுக்கு மாதவிடாய் ஏற் படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதலிரவன்று நீங்கள் அணியவிருக்கும் ஆடை மற்றும் ஆபரணங்கள் கூர்மையானதாக இல்லாமல் (சில ஆடைகளில் கல் வேலைப்பாடும் சரிகை வேலைப்பாடும் நிறைந்திருக்கும்)

பார்த்துக்கொள்ளுங்கள். வாசனைத் திரவியங்களைப் பயன் படுத்துங்கள்.
திருமணமான மகிழ்ச்சியில் உணவின்பால் ஈடுபாடு இருக்காது.

ஆனால், முதலிரவன்று கட்டாயம் இரவு உணவை உட்கொண்டு விடுங் கள். இதன்மூலம் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

உறவின்போது நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதை யாரும் உங்களுக்குச் சொல்லித் தரவேண்டியதில்லை.

அதை நீங்களா கவே கற்றுக்கொள்வீர்கள். உங்களது கணவர் அதை உங்களுக்குக் கற்றுத் தருவார்.

———————————————————–
கேள்வி: நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவரிடம் உடலுறவு பற்றிப் பேசும்போது அவர் அருவருப் படைந்தார்.

அதேநேரம், திருமணத்தின் பின் நான் உறவுக்கு அழைத்து தான் மறுத்தால் தன்னுடன் சண்டை பிடிக்கக்கூடாது என்றும் கூறினார்.

இதனால் திருமணத்துக்குப் பின் இவரால் எனக்கு சுகம் கிடைக்காதோ என்று பயமாக இருக்கிறது. இது திருமணத்துக்குப் பின் சரியாகிவிடுமா? அவர் நிறைய விட யங்களில் அருவருப்படைபவர். அவரின் மனம் மாறுமா?

பதில்: அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனேக வாய்ப்புகள் உண்டு.
உறவு பற்றிய அவரது அருவருப்பானது, உடலுறவு பற்றி அவருக்குக் கிடைத்த தவறான தகவல்கள் அவரை இவ்வாறு எண்ண வைக்கலாம்.

அதாவது, அவர் பூப்பெய்தியதும் முன்னெச்சரிக்கைக்காக அவரது வீட் டிலோ அல்லது உறவு பற்றி அரைகுறையாகத் தெரிந்த அவரது நண்பிகள் வாயிலாகவோ இவ்வாறான எண்ணம் அவருக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

சிலநேரங்களில் அவர் சிறு வயதில் யார் மூலமாவது துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கலாம். சிறுவயதில் அந்தச் சம்பவம் அவர் மனதில் ஏற்படுத்திய வடுவானது உறவு குறித்த அவரது பார்வையைத் தவறாக்கியிருக்கலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நிச்சயமாக அவர் உறவை வெறுக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் ஒரேயொரு விடயத்தை மட்டும் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இது பற்றிய அச்சம் உங்களுக்குள் எழுந்திராது. அதாவது, உறவை வெறுக்கும் பெண் ஒரு ஆணைக் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ நிச்சயமாக விரும்பமாட்டார்.

திருமணத்தின் பின் தாம்பத்தியம் அவசியம் என்பதை அவர் நன்கு அறிந்தேயிருப்பார்.

அப்படியிருந்தும் உங்களை விரும்புவதும், உங்களைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதும், உறவின்பாலான அவரது தடையை இலகுவாக அகற்றிவிட முடியும் என்றும் அவரது இந்த அருவருப்பு உணர்வு மாறிவிடும் என்றுமே உணர்த்துகிறது
.
எனவே, இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தோஷமாக உங்கள் உறவைத் தொடருங்கள்.

யாருக்குத் தெரியும்? உங்களைப் பற்றி அவருக்கு ‘நன்கு’ தெரிந்திருப்பதால், திருமணத்துக்கு முன் உங்களுடன் இவ்வாறு பேசினால் எங்கே நீங்கள் எல்லை மீறி விடுவீர்களோ என்ற பயத்தினால் கூட அவர் இப்படிக் கூறியிருக்கலாம்!