Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பெண்கள்! உடல் பிரச்னைகளை தவிர்க்க செய்ய வேண்டியவை

கர்ப்ப காலத்தில் பெண்கள்! உடல் பிரச்னைகளை தவிர்க்க செய்ய வேண்டியவை

24

கர்ப்பகாலத்தின் முதல் 12 வாரங்களில் வாந்தி, மயக்கம், குமட்டல் பிரச்னை பெரியளவில் உள்ளது. அப்போது பெண்கள், தங்கள் குழந்தையை பாதிக்குமோ என்ற அச்சத்திலும், பதற்றத்திலும் இருப்பார்கள்.

அப்படி இருப்பது கர்ப்பிணிகளை மனரீதியாக பாதிக்கும் . எனவே கர்ப்ப காலங்களில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எதை சாப்பிட்டாலும் வாந்தி, குமட்டல் வருவது இயல்பு தான். எனினும் இதை காரணம் காட்டி சாப்பிடாமல் இருக்கக்கூடாது. இஞ்சி டீ சாப்பிட்டால் சிலருக்கு வாந்தி வராது. இதேபோல் புளிப்பு மிட்டாய் சாப்பிட்டாலும் வாந்தி வராது. எனவே உடல் எந்த உணவுகளை ஏற்கிறதோ அதற்கு ஏற்ப பழகிக்கொள்ள வேண்டும்.

சிலர் மிகக்சூடாக சாப்பிட்டு பழகி இருப்பார்கள். கர்ப்ப காலத்தில் அப்படி சாப்பிட்டால் குமட்டல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நன்கு ஆறவைத்த உணவையே சாப்பிட வேண்டும்.

நிறைய கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் வாந்தி வருவதாக உணர்வார்கள். அப்படி இருந்தால் பிரித்து, பிரித்து ஆறுவேளையாக சாப்பிடலாம். சாப்பாடு அதிக அளவு சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஜுஸ், பழங்கள் சாப்பிடலாம்.

இயல்பாகவே மசாலா அதிகம் நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடு. எனவே கர்ப்ப காலத்தில் அதிக காரம் நிறைந்த உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு ஓய்வு அவசியம். குறிப்பாக மதிய நேரத்தில் பெண்கள் தூங்கினால் நல்லது.

கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சத்துகள் நிறைந்த உணவுகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அதேநேரம் வலுக்கட்டாயமாகச் சாப்பிடும் எல்லா உணவுகளும், வாந்தியையும் குமட்டலையும் அதிகப்படுத்தும். உடல் எந்த உணவை ஏற்றுக்கொள்கிறதோ, அதை மட்டும் சாப்பிடுங்கள்.

கர்ப்பகாலத்தில்,யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அமைதியாக, மகிழ்ச்சியாக உங்களை இருக்கவைக்கும் இசையைக் கேளுங்கள், புத்தகங்கள் படிக்கலாம். உங்களுக்கு மனநிறைவைத் தரும் அனைத்து நல்ல விஷயங்களையும் செய்ய வேண்டும்.