Home ஆண்கள் சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

1617

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.
அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம்.

எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் – கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது.

மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Previous articleஅந்தரங்க உடலுறவின் முதலிரவு ரகசியங்கள்!
Next article7 ‘செகன்ட்ஸுக்கு’ ஒரு முறை ஆண்களுக்கு ‘செக்ஸ்’ நினைப்பு வருமா?