Home ஜல்சா நடன ஆசிரியரை நம்பி மோசம் போன டீனேஜ் பெண்!

நடன ஆசிரியரை நம்பி மோசம் போன டீனேஜ் பெண்!

34

நடன ஆசிரியரின் தவறான வழிநடத்தலின் காரணத்தால் அனோரெக்ஸிஸால் பாதிக்கப்பட்ட டீனேஜ் பெண்!

மார்க்ஹேரிட்டா பார்பிரி, சிறு காலத்தில் தனது வாழ்வில் ஏற்கெனவே நிறைய ஏற்றத்தாழ்வுகளை கடந்து வந்த 18 வயது இளம் பெண். சிறு வயதில் இருந்தே பாலே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு பாலே நடன கலைஞராக வேண்டும் என்பது மார்க்ஹேரிட்டாவின் கனவாக இருந்தது. குழந்தை பருவத்தில் இருந்தே கொள்ளை அழகுடன் இருந்து வந்தவர் மார்க்ஹேரிட்டா. இவரது தோழிகள், நண்பர்கள், உறவினர்கள் இவரது அழகை பற்றி பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மிக பிரபலமாகவும் இருந்தார் மார்க்ஹேரிட்டா. எதிர்பாராத விதமாக பாலே நடனத்தை மார்க்ஹேரிட்டா ஒரு கடுமையான நடன ஆசிரியரிடம் சிக்கி மோசமான நிலையை அடைந்தார்…

கொழுப்பு நிறைந்த தொடைகள்! பாலே நடனம் ஆட உடலமைப்பு நன்றாக இருக்க வேண்டும். இதை காரணம் காட்டி. மார்க்ஹேரிட்டாவின் நடன ஆசிரியர் குறிப்பாக மார்க்ஹேரிட்டாவின் தொடை கொழுப்பு நிறைந்து உள்ளது. அதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனம் உடைந்து போன மார்க்ஹேரிட்டா! நடன ஆசிரியரின் இந்த வார்த்தைகளை கேட்ட மார்க்ஹேரிட்டா மனம் உடைந்து போனார். கடினமான டயட்டை மேற்கொள்ள ஆரம்பித்தார். உடல் எடை குறைக்க வேண்டும் என தினமும் மிக குறைந்த அளவில் கலோரிகள் உட்கொண்டார்.

140 கலோரிகள்! தனது கனவை உடல் உடைத்துவிடக் கூடாது என தினமும் வெறும் 140 கலோரிகள் மட்டும் உட்கொள்ள ஆரம்பித்தார். நிறைய நாட்கள் விரதம் இருப்பது போல எதுமே சாப்பிடாமலும் கூட இருந்திருக்கிறார். சில சமயங்களில் உணவு உட்கொள்ளமாலேயே உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதால் உடல் எடை வேகமாக குறைந்து மோசமான நிலையை எட்டினார் மார்க்ஹேரிட்டா.

தன்னை தானே வெறுத்தார்! முன்பு தான் விரும்பிய, நேசித்த, பெருமையாக நினைத்த மார்க்ஹேரிட்டாவின் அழகும், உடலும் அவரே வெறுக்கும் நிலையை எட்டியது. இதன் காரனத்தால் 55 கிலோவில் இருந்த மார்க்ஹேரிட்டா 25 கிலோவை எட்டினார்

அனோரெக்ஸிக்! இதனால் மார்க்ஹேரிட்டா அனோரெக்ஸிக்கால் பாதிக்கப்பட்டார். இது அபாயமானது என அறிந்த மார்க்ஹேரிட்டா. தனது டயட்டில் மாற்றம் கொண்டுவந்தார். தான் சாப்பிட மறுத்த வெண்ணெய், சாக்லேட் போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தார். மீண்டும் தனது பழைய உடலை (55 கிலோ) எட்டினார் மார்க்ஹேரிட்டா

பாலே நடனத்தை கைவிட்ட மார்க்ஹேரிட்டா! பாலே நடனத்தை கைவிட்ட மார்க்ஹேரிட்டா, இப்போது இசை, நடனம் சேர்ந்த துறையில் கால்பதிக்க எண்ணி வருகிறார். மேலும், உடல் என்பது அசிங்கமானது அல்ல. கொழுப்பே இல்லாமல் வாழ முடியாது. மேலும், ஆரோக்கியமற்ற வகையில் டயட் பின்பற்றி உடல் எடை குறைப்பது அபாயமானது என்றும் மார்க்ஹேரிட்டா கூறுகிறார்.