Home ஜல்சா புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா?

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா?

277

ஒரு காலத்தில் ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற விளம்பரம் வெகு பிரபலமாக இருந்தது. நினைவு இருக்கிறதா? நேஷனல் எய்ட்ஸ் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன் ஆனது எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு செய்ய இப்படி ஒரு ஐடியாவை பயன்படுத்தியது.

டிவி, ரேடியோ, தெருக்களில் உள்ள குட்டி சுவர் என ஒரு இடம் விடாமல் விளம்பரம் செய்யப்பட்டது. கண்டிப்பாக இதனை மறந்திருக்க மாட்டோம். பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விளம்பரம்.

‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ இது என்னவாக இருக்கும்? எதற்காக இந்த விளம்பரம்? என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் போது, அதற்கான விடை பால்வினை நோய்க்கான விழிப்புணர்வு என தெரியவருகையில் எளிதில் அதனை மறக்க மாட்டோம். இதற்காக பொதுவான ஒரு ஆண் பெயர் தேவைப்பட்டது, அது குறிப்பாக யாரையும் புண்படுத்தாததாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த புள்ளி ராஜா என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த புள்ளி ராஜா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. இந்த நோய் பற்றி விழிப்புணர்வு என்பது மறைமுகமாக ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்பதே! இந்த ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரின் வசதிக்காக ஆணுறை மீது புள்ளிகள் கொண்டு வடிவமைத்தனர். இந்த புள்ளியை உணர்த்தவே இந்த வாசகம்.

இந்த விளம்பரம் புதிர் போல அமையவேண்டும் என அதே நேரம், அதற்கான பெயர் காரணம் இருக்க வேண்டும் என்பதற்காக ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற வாசகத்தை பயன்படுத்தினார்கள்.