Home ஜல்சா சன்னி லியோன் திடிரென மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

சன்னி லியோன் திடிரென மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

116

ஷுட்டிங்கின்போது திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் நடிகை சன்னி லியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது அரை டஜன் படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

தமிழில் ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அத்துடன் ஹிந்தியில், ‘அர்ஜூன் பாட்யாலா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்.

தொடர்ந்து ஷூட்டிங் என பிஸியாக வலம் வரும் சன்னி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், ‘ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 11’ என்ற ரியாலிட்டி ஷோவின் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) நடந்த ஷுட்டிங்கில் பங்கேற்றபோது அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை உடனடியாக மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சன்னி லியோனை பரிசோதித்த மருத்துவர்கள், பயப்படுமாறு ஒரு பிரச்னையும் இல்லை. இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்த பின் சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.

இகற்கிடையே, அப்பன்டிக்ஸ் நோயால் அவதிப்பட்டிருப்பாதாலே சன்னி லியோனுக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை அவர் பெற்று வருவதாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Previous articleஆண்கள் பெண்களின் அந்தரங்க உறவு தொடர்பான கேள்வி க்கு டாக்டர் பதில்
Next articleஉடற்பயிற்சியை நிறுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?