Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியை நிறுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

உடற்பயிற்சியை நிறுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

62

உடல் ஆரோக்கியம்:ஆரோக்கியமாக இருக்கவும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் நம்மில் பலர் உணர்ச்சிவசப்பட்டு உடனே ஜிம்மில் சேர்த்துவிடுவோம். ஆனால் இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நம்மால் எந்த ஒரு செயலையும் அன்றாடம் செய்ய முடிவதில்லை. இதனால் ஜிம்மிற்கு கூட தினமும் செல்ல முடிவதில்லை.

பல மாதங்களாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து, திடீரென்று நிறுத்திவிட்டால் அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பக்கவிளைவு #1

ஜிம்மில் தினமும் எடையைத் தூக்கி, திடீரென்று அதை நிறுத்தினால், அதனால் இதுவரை உடலில் இருந்த சக்தி மற்றும் வலிமை முற்றிலும் குறைந்தது போன்று உணரக்கூடும்.

பக்கவிளைவு #2

2-3 வாரங்களில் உங்களால் பேண்ட் பட்டனை போட முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஏனெனில் திடீரென்று உடற்பயிற்சி செய்வதை நிறுத்திய பின், உள்ளே தள்ளப்பட்டிருந்த தொப்பை மீண்டும் வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும்.

பக்கவிளைவு #3

எந்த ஒரு காரணமுமின்றி மிகுந்த சோர்வை உணரக்கூடும். ஜிம் செல்வதை நிறுத்திய பின், உடல் கடுமையாக வேலை செய்யும் பழக்கத்தில் இருந்து தளர்ந்து, சிறு வேலை செய்தாலும் மிகுந்த சோர்வை உணர நேரிடும்.

பக்கவிளைவு #4

நீண்ட நாட்களாக் ஜிம் செல்லும் பழக்கத்தைக் கொண்டவர்கள், திடீரென்று ஜிம் செல்வதை நிறுத்திய பின், தசைகளானது சுருங்க ஆரம்பிக்கும்.

பக்கவிளைவு #5

ஜிம் செல்வதை நிறுத்திய பின், சிலர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவார்கள். எனவே நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், உடலுக்கு சிறிது வேலை கொடுங்கள்.

பக்கவிளைவு #6

ஜிம் செல்வதை உடனே நிறுத்தினால், சிலரால் சாப்பிடவே முடியாது அல்லது சிலர் அதிகப்படியான அளவில் உணவை உட்கொள்வார்கள். இதனால் கடுமையான உடல் பருமன் அல்லது உடல் எடை இழப்பால் அவஸ்தைப்படக்கூடும்.

பக்கவிளைவு #7

முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை நிறுத்தினால், மன அழுத்தத்திற்கு சிலர் உட்படக்கூடும். பொதுவாக உடலுக்கு நல்ல உழைப்பு கொடுக்கும் போது மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்தாதீர்கள்.