Home ஜல்சா மாணவனின் அப்பாவிற்கு வாழ்க்கை கொடுத்த ஒரு ஆசிரியை!

மாணவனின் அப்பாவிற்கு வாழ்க்கை கொடுத்த ஒரு ஆசிரியை!

46

மானஸா டீச்சர் என்றால் அந்த அரசு மேல்நிலைப் பள்ளியே பெரு மூச்சு விடும். அப்படி ஒரு பேரழகி.

நல்ல வாசனை சென்ட் பூசிக் கொள்வாள். வீட்டில் இருந்து காரில் மதியம் சாப்பாடு வரும் தினமும் அசைவம் அதை அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுவாள்.

தலைமை ஆசிரியரே மதியம் தேடி வந்து விடுவார். மானஸா என்ன சாப்பாடு என்றபடி. அந்த பள்ளியில் ரவி என்கிற மாணவன் ப்ளஸ் ஒன் படித்து வந்தான்.

மானஸாவிற்கு அந்த மாணவனை மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு அமைதியானவன் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு நாள் அவன் அழுதபடி இருந்தான்.

என்னடா என்று கேட்டாள் பள்ளி டூருக்கு வர முடியாத காரணத்தைக் கூறினான் ரவி. அவள் ஆறுதல் கூறினாள். அந்த டூர் பள்ளி கல்வி சம்பந்த மான டூர்.

எனவே, வந்தே ஆகவேண்டும் என்று ஹெச் எம் கூறி விட ரவியால் பணம் கட்ட முடியவில்லை வெளியே நிறுத்திவிட்டார் ஹெச் எம் .

அவன் கண்கள் கலங்கியபடி நின்றது மானசாவிற்கு பாவமாக இருக்கவே, அவளே பணம் கட்டினாள். உங்க அப்பா சம்பளம் வாங்கியதும் கொடு என்று கூறி விட்டாள்.

டூர் போய் வந்தான் ரவி. அடுத்த நாள் மாலை பள்ளி வாசலில் நின்றார் ரவியின் அப்பா. ரவி பள்ளி விட்டு வெளியே வர ரவியின் அப்பா டூர் பணத்தை கொடுத்து டீச்சரிடம் கொடுத்து விடு என்றார்.

அப்போது மானஸா டீச்சரும் வெளியே வர, அப்பாவிடம் அறிமுகம் செய்தான் ரவி. மானசாவிற்கு பயங்கர அதிர்ச்சி.

இவரா உங்க அப்பா என்றாள். ஆமா டீச்சர் என்றான் ரவி. கண் கலங்கினாள் மானஸா. ஏன் என்னாச்சு டீச்சர் என்றாள். மானஸா அப்பா பெரிய பணக்காரர்.

ஆனால், நல்ல குடிகாரர். தினமும் குடிக்க வேண்டும் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு இரவு வீட்டின் அலாரம் அடிக்க மானஸா கதவைத் திறந்தாள்.

சேகர் என்பவர் அப்பாவை தாங்கிப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். கையில் அப்பாவின் சூட்கேஸ்.

அப்பாவின் உடம்பெங்கும் நகைகள். தள்ளாடி வந்தவர். அழைத்து வந்தவரை மகளிடம் என்னை காப்பத்தினான்மா. இவன் இல்லைனா என்ன கொன்னு போட்டுட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போயிருப்பானுக என்று வலி தாங்க முடியாமல் சோபாவில் சாய்ந்தார்.

விசாரித்தாள் மானஸா. அவர் நடந்த விஷயங்களைக் கூறி விட்டு கிளம்பினார். அப்பா அந்த வலியிலும் அவனுக்கு நிறைய பணம் கொடுத்து அனுப்பு மானஸா என்றார். அவன் மறுத்தான். மானஸா கட்டாயப்படுத்தி பத்தாயிரம் கொடுத்தாள்.

அவன் மிகவும் சங்கடப்பட்டான். செய்த உதவிக்கு பணம் வாங்குவது சரியில்லைங்க.நான் எந்த உதவியும் எதிர்பார்த்து இந்த உதவிய செய்யலை என்றான்.
அவள் கட்டாயப் படுத்த, அவன் தயங்கியபடி எனக்கு கடனா வேண்ணா இரண்டாயிரம் ரூபா கொடுங்க. என் பையன் மானப்பிரச்னை என்று கூறி இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு போனான்.

அவன் தான் ரவியின் அப்பா. மானஸாவிற்கு அதிர்ச்சி. போன் நம்பர் வாங்கினாள் அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.

இப்படி ஒரு மனிதனா மனைவி இல்லாத போதும் கஷ்டப்பட்டு உழைத்து மகனைப் படிக்க வைக்க போராடும் நல்ல மனிதன் எங்கே..? சந்தேகப் புத்தியால் டைவர்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப்போன தனது கணவன் எங்கே.?

ஆறு மாதம் இருவரும் ஆறுதலாக பழகினார்கள். ரவியை அழைத்துக்கொண்டு மானஸா வீட்டிற்கு சாப்பிடச் சென்றார் அப்பா.

மானஸா அப்பாவிற்கும் ரவி அப்பா சேகரை மிகவும் பிடித்துப் போனது. ரவியிடம் எடுத்துக் கூறி சம்மதம் கேட்டாள் மானஸா.

ரவி மகிழ்ச்சியாக சம்மதித்தான். பின் திருப்பதி சென்றார்கள். சேகரை திருமணம் செய்து கொண்டாள் மானஸா.

மானஸா அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொள்கிறார் சேகர். பிரதி பலன் எதிர் பாராமல் நேர்மையாக நல்லது செய்தால் இறைவன் வேறு ஏதோ ஒரு ரூபத்தில் நல்லது செய்த விடுகிறான்.