Home ஜல்சா சமூக வலைதளங்களில் பாலியல் தொழில் அதிகரிப்பு!!

சமூக வலைதளங்களில் பாலியல் தொழில் அதிகரிப்பு!!

49

pp-1பாலியல் தொழில் செய்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இணையதளங்கள் வழியாக பாலியல் தொழில் செய்வது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முதன் முதலாக பாலியல் தொழிலுக்கு சமூக வலைதளங்கள், ஏப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது விளம்பரங்களை இணையதளத்தின் உள் பக்கங்களில் மறைத்து வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது.

பாலியல் தொழிலில் முகவர்களாக செயல்படுபவர்கள் விளம்பரங்கள் கொடுக்க அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் இவர்களுக்கு உதவுகிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பாலியல் முகவர்கள் ஆண்டுக்கு 75,000 டாலர்கள் முதல் 1,00,000 டாலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. 80 சதவீத பாலியல் தொழில் இணையதளம், சமூக வலைதளங்கள், ஏப் வாயிலாக நடக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு ஏப்களை பயன்படுத்துகின்றனர். பாலியல் தொழில் நடக்கும் விவரங்களை தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட ஏப்களுக்கு சென்று, வாடிக்கையாளர் இருக்கும் முகவரியை டைப் செய்தால், பாலியல் தொழில் நடக்கும் இடத்தின் முகவரி கிடைக்கும் வகையில் ஏப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் இந்தத் தொழில் நின்று விடுவதில்லை. இந்தத் தொழிலுக்கு வருபவர்களுக்கு நேர்முகத் தேர்வு வைக்கின்றனர். அந்தத் தேர்வுக்கு வருகிறவர்களுக்கு 60 டாலர் கொடுக்கின்றனர் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.