Home ஆரோக்கியம் பிரசவத்திற்குப் பின் உடலுறவு பற்றி தெரியுமா?

பிரசவத்திற்குப் பின் உடலுறவு பற்றி தெரியுமா?

83

அந்தரங்கம்:உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது; நாள் முழுவதும் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான். ஒரு நாளின் முடிவில் உங்கள் மனதில் உங்கள் குழந்தை மீண்டும் தூங்கி எழுவதற்குள் சற்று நேரம் படுக்கையில் கண்ணயரத் தோன்றும்.

யோசித்துப் பாருங்கள் உங்களது பாலியல் வாழ்வில் என்ன நிகழ்ந்ததென்று?
செக்ஸ்! உங்களது குழந்தை பிறந்த பிறகு இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமானதாக ஒலிக்கக் கூடும். படுக்கையில் கணவருடன் நெருக்கமாக இருப்பது என்பது ஒரு இளம் தாயின் மனதில் கடைசி விசயமாகத்தான் இருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இளம் தாயாக உங்களுக்கு இருக்கும் அதிக பொறுப்புகள் உங்களது செயல்பாட்டுப் பட்டியலில் எங்கும் செக்ஸ் இடம்பெற விடுவதில்லை.

அது தற்போது எப்படி இருக்கும்? (So, how will it be now?)

ஒன்று மட்டும் நிச்சயம். தற்போது அது மாறுபட்ட அனுபவமான இருக்கும். உங்களது உடலில் ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் உங்களை உறுதியற்றவராக உணரக் கூடும்; உங்களது ஹார்மோன்கள் உங்களுக்கு அதில் ஆர்வத்தை ஏற்படுத்தாது. மேலும் உங்கள் யோனியும் குணமடைய வேண்டும்.

எவ்வளவு சீக்கிரம் அது சாத்தியம்? (How soon is it possible?)

பெரும்பாலான மருத்துவர்கள் 6 வாரங்கள் வரை பொறுத்திருக்கும் படி ஆலோசனை வழங்குகிறார்கள். இது உங்களுக்கு வெளிப்பட வாய்ப்புள்ள அனைத்து சாத்தியமான தொற்றுகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். உங்கள் பிரசவத்திற்கு பிறகு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே பாலியல் செயல்பாட்டைத் துவங்குங்கள்.

வெறுமனே, பெரும்பாலான இந்திய கலாச்சாரத்தில் தாயும் சேயும் 40 நாட்கள் வரை தாயின் கணவரிடம் இருந்து தனித்து வைக்கப்படுகிறார்கள். சரி, இந்தப் பழக்கம் பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு நிற்க 3 முதல் 8 வாரங்கள் ஆகும் என்ற அறிவியலின் காரணமாக இருக்கக் கூடும். இது உங்களது உடல் அது செய்த அளப்பரிய பணிக்கு பிறகு குணமடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறி ஆகும். இது உங்கள் கருப்பை வாய் மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியதை உறுதியளிப்பதுடன், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது குணமடைவதையும் உறுதியளிக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதால் என்ன நிகழும்? ( ?)

உங்களது அனுபவம் பல காரணிகள் சார்ந்ததாக இருக்கும். சோர்வு, கவலை, மன அழுத்தம், உணர்ச்சியின்மை மற்றும் வலி பயம் போன்றவை ஒரு பெண்ணை மீண்டும் உடலுறவில் ஈடுபடுவது குறித்து பேசுவதைத் தடுக்க வழிவகுக்கும் காரணிகளில் சிலவாகும். ஆனால் இதற்கு முன்னர் அனுபவித்ததைக் காட்டிலும் சிறந்த உடலுறவை அனுபவிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் வலியை அனுபவிக்கிறார்கள். இதில் அவர்கள் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றார்களா அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார்களா என்பது ஒரு பொருட்டல்ல. பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கு தையல் போடப்பட்டிருந்தால் அதிக வலி இருக்கலாம். பிரசவத்திற்கு பிறகு உங்களது யோனி உலர்ந்துவிடும். மேலும் உங்களது குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் யோனியின் உலர்த்தன்மை இன்னும் அதிகரிக்கும். யோனி உலர்ந்த நிலையில் இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது நல்ல யோசனை அல்ல. அத்தகைய தருணங்களில் நீங்கள் லூப்ரிகண்டுகள் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்.

அது மீண்டும் நிகழுமா? (Will it happen ever again?)

சோர்வடைய வேண்டாம்; உங்களது வலியைக் குறைத்து, உங்களை நன்றாகவும் மலர்ச்சியுடனும் மாற்றுவதற்கு உதவக்கூடிய வழிமுறைகள் உள்ளன. உங்களது உடல் உற்சாகத்துடன் பழைய நிலைக்குத் திரும்ப நீங்கள் அதற்குத் தகுந்த அவகாசம் அளிக்க வேண்டும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் உங்களுக்கு உதவும் (Here are tips that would help you):

ஃபோர்பிளே: இது அற்புதமான உடலுறவு மந்திரமாகும். இதனை நீங்கள் உருவாக்கி செயல்பட வேண்டும். நீங்கள் இறுதி வரை செல்ல முடியவில்லை என்றாலும் கூட, இது சிறப்பானதாகும். மெதுவாக செயல்படுங்கள், செயல்பாடுகளில் வேகம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

உங்கள் துணைக்கு தெரியப்படுத்துங்கள்: நீங்கள் புண்பட்டால் அதனை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துவது நல்லது. நீங்கள் இருவரும் சேர்ந்து அதனை எதிர்கொள்ள வேண்டும்.

ஈரப்பதம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: தாய்ப்பால் மற்றும் அனைத்து ஹார்மோன் மாற்றங்களால் உங்களது யோனி பொதுவாக உலர்ந்திருக்கும். இதற்கென மருந்தகங்களில் கிடைக்கும் லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்துங்கள்.

தயாராகுங்கள்: சூடான குளியல் செய்யுங்கள் ஓய்வாக இருங்கள் வீட்டு வேலைகள் பற்றி ஏதும் நினைக்க வேண்டாம். இந்த குறிப்பிட்ட கணத்தில் வாழ்வது மிகவும் முக்கியம்.

இடுப்புதள பயிற்சிகள் அதிசயங்கள் நிகழ்த்தக் கூடும்: இடுப்புதள பயிற்சிகள் உங்களது இடுப்புதள தசைகளை மேம்படுத்த செய்யப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இந்த பயிற்சி செய்வதால் நிறைய நன்மைகள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடலுறவு நிலைகள்: நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான மாறுபட்ட உடலுறவு நிலையைக் கண்டறிய வேண்டும். எது உங்களுக்கு சரிவருகிறது என முயற்சித்துப் பாருங்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்குப் பிறகும் உங்களுக்கு வலி நின்றிருக்க வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு வலி நிற்கவில்லை எனில் உங்களது மருத்துவரைச் சந்திக்கவும்.

Previous articleதாய்மை அடைய பெண்களின் சிறந்த அந்த நாட்கள்
Next articleநீங்கள் ஒருநாளைக்கு எத்தனை முறை சிறுநீர் வெளியேற்றுவீர்கள்?