Home ஆரோக்கியம் நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை முறை சிறுநீர் வெளியேற்றுவீர்கள்?

நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை முறை சிறுநீர் வெளியேற்றுவீர்கள்?

48

பொதுமருத்துவம்:மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.

சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.

ஒருவரது உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டால், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

எனவே ஒருவர் அன்றாடம் போதுமான அளவு சிறுநீரைக் கழிப்பது என்பது அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை கழிக்கலாம்.

இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம். இது அனைத்தும் அவர்கள் எவ்வளவு தண்ணீர் அல்லது பானங்களைக் குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும்.

சில சமயங்களில் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும்.

ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

சிறுநீரை குறைவாக கழிக்கிறோம் என்பதை எப்படி அறிவது?
ஒருவர் ஒரு நாளைக்கும் குறைவான அளவு சிறுநீர் கழித்தால், அவர்களது கால்கள், கைகள், முகம் போன்றவை வீங்கி காணப்படும்.
உங்களுக்கு இம்மாதிரியான வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் இருக்க உடனே சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகளைத் தெரிந்து பின்பற்ற ஆரம்பியுங்கள்.