Home ஆரோக்கியம் பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி? உதிரப்போக்கை உதாசீனப்படுத்தாமல் பாருங்க!

பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி? உதிரப்போக்கை உதாசீனப்படுத்தாமல் பாருங்க!

400

பக்கத்து வீட்டு பூக்காரம்மா, “தண்ணி ஊத்தி ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள மறுபடியும் ஊத்தணும் போல” என்று சொல்லிக்கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தார். இதெல்லாம் கிராமப்பக்கம் மாதவிடாய் குறித்து நேரடியாக பேசுவதற்கு பதிலாக, பேச்சு வாக்கில் சொல்லப்படும் சங்கோத மொழிகளாகும். அதை வைத்தே மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் மாதம் இருமுறை முறை, மாதவிடாய் வருகிறது என்று சொல்ல வருகிறார்.

ஒரு சில பெண்கள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு சிலர் என்ன காரணமா இருக்கும்? என்று நினைத்து நினைத்து தேவையில்லாமல் மன அழுத்தத்தை தேடிக்கொள்வார்கள். அதற்கு வேலையே இல்லை. உடல் எடை திடீரென அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ இந்த மாதிரி இரண்டு முறை மாதவிடாய் வரும். சிலருக்கு ஹார்மோன் சமநிலை இல்லாமல், கருப்பையில் சிறிய நீர் கட்டி மாதிரி தோன்றும். அப்படி ஆனாலும் இரண்டு முறை மாதவிடாய் வரும்.

வம்சவிருத்தியே வேண்டாம் என்று, சில பெண்கள் அளவுக்கு அதிகமாக கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் இந்த மாதிரியான நிலை வரும். இது தவிர கருப்பை பிரச்சனை, பாலியல் தொற்று போன்ற காரணங்களாலும் வரலாம். இதற்கு பெரிதாக மனதை போட்டு அலட்டிக்கொள்ள தேவையில்லை. வாழ்க்கை முறையில் சிறிது மாற்றம், செய்தாலே இதற்கு எளிதாக தீர்வு காண முடியும் என்பதில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முடிந்த வரைக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக்கொண்டு, காய்கறி, பழங்கள், கீரைகள் என்று அதிக சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எள், நல்லெண்ணெய் மற்றும் வெல்லம் எடுத்துக்கொள்வது கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சில நேரங்களில் மன அழுத்தம் கூட மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். உங்களால் இயன்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தால், எந்த பாதிப்பும் உங்களை அண்டாது.