Home இரகசியகேள்வி-பதில் என் மனைவி தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்: ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?

என் மனைவி தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்: ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?

72

கேள்வி: எனக்கு 22 வயது ஆகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளேன்/ நான் இப்போது படித்துக்கொண்டு இருப்பதால் குழந்தைப் பிறப்பைக் குறைந்தது ஒரு வருடத்துக்குத் தள்ளிப்போடலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நான் என்ன செய்யவேண்டும்? மனக் கட்டுப்பாட்டுடன் இருந்துவிடலாமா? இல்லை வேறு ஏதாவது மாற்றுவழி இருக்கிறதா?

பதில்: மனக் கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.

குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
————————————————

கேள்வி: திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்குத் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையவில்லை. ஆனால் என் மனைவிக்கு அதில் ஆர்வமே இல்லை. உதட்டு முத்தம் கொடுத்தால்கூட, அவளுக்குப் பிடிப்பதில்லை. தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். அவளுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.

பதில்: உங்கள் மனைவியின் “நோ ரியாக்ஷன்“ நிலைக்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கலாம்.

1. உடலில் ஏற்படும் ரசாயனக் கோளறுகளால் விளையும் உபாதைகள், உதாரணத்துக்கு நீரிழிவு நோய் (டயாபெடிஸ்), ரத்தக் கொதிப்பு, தைராய்ட் சுரத்தலில் குறைபாடு, மனச்சோர்வு, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவை.

தாம்பத்யம் என்பது உடல் ரசாயனங்களின் ஒருங்கிணைந்த கச்சேரி. அந்த ரசாயனங்களில் ஏதேனும் அபஸ்வரம் நேர்ந்தால், கச்சேரியே களை இழந்துவிடுகிறது. இது தொடராமல் இருக்கவேண்டுமானால் உங்கள் மருத்துவரை அணுகி, உடல் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சையும் செய்துகொண்டால், கூடிய சீக்கிரமே ரசாயனங்கள் ஸ்ருதி சேர்ந்து கச்சேரியும் அமர்க்களப்படும்!

2. உள்ளத்தில் ஏற்படும் ஊமைக்காயங்களால் உளைச்சல்கள் உண்டாகின்றன. உடற்கோளாறுகளை விட இந்த உள்ளக் கோளாறுகள்தான் பெரும்பாலான தாம்பத்ய பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. பொதுவாக பெண்ணின் மனநிலை, தாம்பத்யத்தை அன்பின் வெளிப்பாடாகவே பாவிக்கிறது. அன்பின் வெளிப்பாடாக தன் பங்குக்கு அவள் எதிர்பார்ப்பது, அவளையும் அவள் சுற்றத்தாரையும் தகுந்த மரியாதையுடன் நடத்துவது, அவள் பணிகளில் உதவுவது, அவளது பொருளாதாரத் தேவைகளை முடிந்த மட்டும் பூர்த்தி செய்வது, அவளுடன் பேச நேரம் ஒதுக்கி – பாராட்டு, புலம்பல், புரளி என்று அவள் எதைப் பேசினாலும் காது கொடுத்துக் கேட்பது (கஷ்டம்தான், குறைந்தபட்சம் கேட்பதுபோல நடிப்பது!) படுக்கையைத் தவிரவும் மற்ற சந்தர்ப்பங்களில் அவளைக் கண்டுகொள்வது… இப்படி காமம் சாராத பல தருணங்களில் அவளிடம் பக்குவமாக நடந்துகொண்டால்தான், அவளது இனம்சேரும் ஸ்விட்ச் இணக்கமாக இயங்கும்.

அதை விட்டுவிட்டு, இந்த னான் செக்சுவல் சமாசாரங்களில் அவளுக்கு அதிருப்தி ஏற்படும்படி நடந்துகொண்டால் போச்சு! “இதுக்கு மட்டும்தான் நானா?“ என்று முக்கியமான நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்.

இந்த உளவியல் உண்மைகளை கிரகித்துக் கொண்டு, உங்கள் மனைவியுடன் நீங்கள் இதுவரை கொண்டுள்ள னான் செக்சுவல் உறவில் ஏற்பட்டிருக்கும் – நீங்கள் இதுவரை இதெல்லாம் ஒரு மேட்டரா என்று அசட்டையாக