Home அந்தரங்கம் அதென்னங்க ஜி-ஸ்பாட் ?… பெண்களுக்கு மட்டும்தான்இந்த மன்மத திறவுகோல் இருக்குமா?..

அதென்னங்க ஜி-ஸ்பாட் ?… பெண்களுக்கு மட்டும்தான்இந்த மன்மத திறவுகோல் இருக்குமா?..

75

உடலுறவில் உச்சக்கட்ட இன்பம் பெறுவது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்தக் கேள்வியோடு இணைந்த ஒரு வார்த்தை தான் ஜி ஸ்பாட்.

பாலுறவுக்கான தூண்டுதலின்போது, பெண்களுக்கு அதிக இன்பம் கொடுக்கக்கூடிய பகுதி என்று ஜி ஸ்பாட் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். பெண்களுக்கு எப்படி உடலுறவின்போது உச்சம் உண்டாகிறது என்ற கேள்வி இல்லாத ஆண்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

ஜி-ஸ்பாட் உண்மையில் ஜி ஸ்பாட் உள்ளதா? என்று லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி குழுவினர், டாக்டர் டிம் ஸ்பெக்டர் என்ற பேராசிரியரோடு இணைந்து ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். 1800 பெண்களிடம் உடலுறவு நிகழ்வு பற்றிய நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவின்படி, ஜி ஸ்பாட் என்பது கிளிட்டோரியஸின் ஒரு பாகத்தை குறிப்பதாக இருக்கலாமே தவிர, உணர்ச்சி மிக்க தனியொரு பகுதி அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுகள் இதற்கு முந்தைய ஆய்வுகளை காட்டிலும் இந்த ஆய்வு அதிக அளவு தரவுகளை கொண்டிருந்தாலும், இது ஒத்த அல்லது மாற்று தோற்றமுடைய இரட்டையர்கள், சகோதர சகோதரிகள் தாமாக அளித்த அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு செய்யப்பட்டதால் இதன் முடிவுகளை பாலியல் வல்லுநர்களும், ஆய்வாளர்களும் ஏற்க மறுக்கின்றனர்.

கற்பனையா? உண்மையா? சில ஆய்வுகள், ஜி ஸ்பாட் என்பது புணர்ச்சிப் புழையின் தனி பகுதி என்று நம்புகின்றன; வேறு சில ஆய்வுகள், ஜி ஸ்பாட் என்று ஒன்று இருந்தாலும் அது கிளிட்டோரிஸின் நீட்சியாகவே அமையும் என்று நம்புகின்றன. ஆனாலும் ‘ஜி ஸ்பாட் – கற்பிதமா? உண்மையா?’ என்ற விவாதம், உடலுறவில், அதைக் குறித்ததான மக்களின் பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

எங்கே இருக்கிறது? ஐயூடி என்னும் கருத்தடை சாதனத்தை வடிவமைத்த ஜெர்மானிய மகப்பேறு மருத்துவர் எர்னஸ்ட் கிராஃபன்பர்க், பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை அளிப்பதில் சிறுநீர்க்குழாயின் பங்கு பற்றி ஆய்வும் செய்தார். அவர் பெயரைக் கொண்டே 1981-ம் ஆண்டு, ஜி ஸ்பாட் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு தம் ஆய்வு பற்றி அவர் வெளியிட்ட கட்டுரையில், பெண்ணுறுப்பில், புணர்ச்சிப் புழையின் முன்புறத்தில் சிறுநீர் புழைக்கு இடையேயான பகுதியில், ஓர் உணர்ச்சிமிகு பகுதியை காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் ஸ்கலிதம் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களின் ஸ்கலிதத்தை பற்றிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் அதே முடிவை எட்டினர். அப்போது பிறந்ததுதான் ஜி ஸ்பாட் என்னும் வார்த்தை. ஜர்னல் ஆஃப் செக்ஸ் ரிசர்ச் என்ற பாலுறவை பற்றிய ஆய்விதழில் அந்த வார்த்தை பதிப்பிக்கப்பட்டது

ஜி-ஸ்பாட் வார்த்தை அறிமுகம் 1982-ம் ஆண்டு, ஜி ஸ்பாட் மற்றும் மனித பாலுறவைப் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற புத்தகத்தின் மூலம் அமெரிக்காவுக்கு ஜி ஸ்பாட் என்ற வார்த்தை அறிமுகமானது. அதன் பிறகு உச்சக்கட்டத்தை எட்டுவதைக் காட்டிலும் ஒருவரது ஜி ஸ்பாட்டை கண்டுபிடிப்பதே உடலுறவின் நோக்கமாகிப்போனது. பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் ஜி ஸ்பாட்டை கண்டுபிடிப்பது, உடலுறவு இன்பத்தை அதிகரிப்பது குறித்த அறிவுரைகள், குறிப்புகளை வெளியிட தொடங்கின.

பெண்களின் நம்பிக்கை சில பெண்கள் ஜி ஸ்பாட் என்று ஒன்று இருப்பதை உறுதியாக நம்புகின்றனர்; சிலருக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை; வேறு சிலரோ ஜி ஸ்பாட் இல்லையென்று மறுக்கின்றனர். இன்னும் சில பெண்கள், உடலுறவின் அளவுகோலாக ஜி ஸ்பாட் கருதப்படுவதைக் குறித்து எரிச்சலுறுகின்றனர். சிலருக்கோ ஜி ஸ்பாட்டை கண்டுபிடிக்க முடியாததால் உடலுறவில் ஈடுபட முடியாத மனத்தடை ஏற்படுகிறது. தங்கள் இணைக்கு திருப்தியான இன்பத்தை அளித்தோமா என்ற குழப்பத்தை ஜி ஸ்பாட் ஆண்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

மறுப்பு ‘இது தைராய்டு சுரப்பி?’ என்று ஓர் உறுப்பை குறிப்பிடுவது போன்று, ஜி ஸ்பாட்டை சுட்டிக்காட்ட முடியாது. மாறாக ‘நியூயார்க் நகரம்’ என்று குறிப்பிடுவது போன்றது. ஜி ஸ்பாட் என்பது உடலின் பல்வேறு மண்டலங்கள் சந்திக்கும் பகுதி என்று அமெரிக்காவிலுள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழத்தின் ஆய்வுக் குழு ஒன்றின் தலைவர் டாக்டர் பாரி கமிசரக், 2011-ம் ஆண்டில் தெரிவித்துள்ளார். அது ஒருவித உணர்வுதானே ஒழிய தனி இடம் கிடையாது.

உறவில் இன்பம் ஜி ஸ்பாட், ஓர் இடம் அல்ல; அது ஒரு பகுதி என்ற தெளிவு, உடலுறவில் மனத்தடை இல்லாமல் ஈடுபட்டு இன்பத்தை பெற உதவும். ஒவ்வொரு பெண்ணும் தனித்துவம் கொண்டவர்கள். பலருக்கு கிளிட்டோரிஸே உணர்ச்சி மிக்கது. அதைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்ட இன்பத்தை கொடுக்க முடியும். சில பெண்களுக்கு புணர்ச்சி மட்டுமே உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும். புணர்ச்சிப் புழையின் உள் மற்றும் வெளி சுவர்ப்பகுதிகளில் அநேக நரம்புகள் முடிவடைகின்றன. வெவ்வேறு பெண்களுக்கு இதன் அளவுகள் மாறுபடக்கூடும். சரியான இடத்தில் தூண்டுவதன் மூலம் இன்பத்தை அளிக்க முடியும்

மன்மத திறவுகோல் உடலுறவில் இன்பத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு நிலைகளில், பல்வேறு விதத்தில் தூண்டி சோதிக்கலாம். ஜி ஸ்பாட் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, இன்பத்தை அதிகரிப்பது நம் செயல்பாடுகள்தாம். பெண்ணுக்கு பெண் வேறுபாடுகள் இருக்கும் என்பதால், இவ்விஷயத்தில் பொறுமையான செயல்பாடே பலன் தரும். உடலோடு மனமும் இசைந்து செயல்பட்டால் உடலுறவில் உச்சக்கட்ட இன்பம் சாத்தியமாகும். அதனால் தான் இந்த ஜி-ஸ்பாட் பகுதியை மன்மதத் திறவுகோல் என்று குறிப்பிடுகின்றனர்.