Home சமையல் குறிப்புகள் சுவையான மொறு மொறு கோலிப்ளவர் மஞ்சூரியன்

சுவையான மொறு மொறு கோலிப்ளவர் மஞ்சூரியன்

123

தேவையான பொருட்கள்
கோலிப்ளவர் பெரிது – 1
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது – 1 டேபிள்
ஸ்பூன் மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
மைதா மாவு – 1½
கப் கான்பிளவர் மாவு – 5 கப் எண்ணெய்.

44செய்முறை

முதலில் , காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மைதா மாவு, கான்பிளவர் மா, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
அடுத்ததாக , இஞ்சி விழுது மற்றும் சோயா சாஸை தண்ணீரில் கலக்கவும். அதில் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும், அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும், 5, 6 துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

காலிபிளவர் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும் (அதிகமாக போட்டால் மொறுமொறு வென்று வராது, மேலும் சரியாக வேகாது.) ஆகவே கொஞ்சமாக எண்ணையில் போடு பொரித்து எடுக்கவேண்டும் .
இப்பொழுது , சுவையான மொறுமொறு கோபி மஞ்சுரியன் தயார்.