Home உறவு-காதல் உங்கள் கணவன் வேறு பெண்ணுடன் கள்ளதொடர்பில் இருக்கிறார? இதை கவனியுங்க

உங்கள் கணவன் வேறு பெண்ணுடன் கள்ளதொடர்பில் இருக்கிறார? இதை கவனியுங்க

206

கள்ளக்காதல் உறவு:எத்தனை சிறந்த காதலாக இருந்தாலுமே கூட, சில சமயம் சூழல் அமையும் போதும், வாய்ப்புகள் தேடி வரும் போதும், சல்லாபத்தில் சிலர் தவறு செய்கிறார்கள். தாங்கள் செய்த தவறை எப்படியும் மறைத்து விடலாம் என்று இவர்கள் கருதலாம்.

ஆனால், எந்த ஒரு தவறிலும் தடயங்களை முழுமையாக மறைத்துவிட முடியாது. சில சமயம் தடயங்கள் நம்முடனே தங்கி இருக்கும். அதை நாம் மறைந்திருப்போம். சில சமயம் தவறுகள் நிகழும் போதே மாட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அப்படி தங்கள் துணையிடம் கள்ள தொடர்பு விவகாரத்தில் சிக்கியவர்கள்….

1 ஒருமுறை சாதாரணமாக அவரது மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் விடுமுறை புகைப்படங்கள் என்று ஒரு ஃபோல்டர் இருந்தது. அந்த படங்களை ஸ்க்ரால் செய்து பார்த்துக் கொண்டிருந்த போது, நடுவே ஒரு பெண்ணுடன் அவர் முத்தமிட்டுக் கொண்டிருந்த படங்களை கண்டு அதிர்ந்தேன். அப்போது தான் அவர் அந்த பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பதை அறியவந்தேன்.

#2 நான் பலமுறை அவர் ஏதோ உறவில் இருக்கிறார் என கண்டுபிடித்தேன். முதல் முறை நான் விடுமுறைக்கு என் அம்மா வீட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது, வீட்டில் ஒரு காலி ஒயின் பாட்டில் இருந்தது. அவருக்கு ஒயின் குடிக்கும் பழக்கம் இல்லை. மேலும், அது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது மழுப்பினார். பிறகு, ஒருமுறை அவரது பையில் ஏதோ ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான பில்களை கண்டேன். மூன்றாம் முறை, அவரது மொபைலில் வந்த மெசேஜ் நோட்டிபிகேஷன்களை படித்தேன்.

#3 இங்கே நான் இழந்தது காதலை மட்டுமல்ல, தோழியையும் தான். நாங்கள் காதலில் இணைந்து எட்டு மாதங்கள் தான் இருக்கும். நான் சென்ற ரெஸ்டாரன்ட்டில் ஏற்கனவே அவர்கள் கட்டிபிடித்துக் கொண்டு ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்தனர். அதை கண்டு நான் அதிர்ந்தேன். என் தோழியே எனக்கு துரோகம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

#4 நாங்கள் இரண்டு வருடமாக உறவில் இருந்து வருகிறோம். எத்தனையோ முறை எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நான் முயற்சித்தேன். ஆண்கள், அவன் எதோ ஒரு காரணம் காட்டி தட்டிக் கழித்து கொண்டே வந்தான். இது அவன் என்னை வெறுக்கிறானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை நான் இன்னும் அவனுக்கு முழுமையான நம்பிக்கை அளிக்கவில்லையோ என்று என்னை நானே சந்தேகித்தேன். கடைசியில் தான் அறிந்தேன், வேறொரு ஆணுக்காக அவன் என்னை ஒதுக்கி வருகிறான் என்பதை. அவனுக்கு பெண்களை காட்டிலும் ஆண்கள் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆம்! அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.

#5 வேலை விஷயமாக நான் பெங்களூரு செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால், அந்த இடைப்பட்ட நாளில் என் காதலிக்கு பிறந்தநாள் வேறு. சரி அவளுக்கு சர்ப்ரைஸ் தரலாம் என்று சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பினேன். ஆனால், சர்ப்ரைஸ் கொடுத்தது அவள். என்னுடன் தங்கியிருந்த ரூம் மேட் உடன் அவன் உறவில் இணைந்திருந்தாள்.

#6 எங்கள் காதல் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப். நாங்கள் இருவருமே ஒருவரை அதிகமாக காதலித்தோம். நேரம் அமையும் போது அவன் என்னை பார்க்க வருவான். அதிகமாக எங்கள் காதல் மொபைல் காலில் தான் பயணித்தது. ஆனால், சில சமயம் கால் செய்யும் போதெல்லாம் அவனது மொபைல் பிஸியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணம் வைத்திருந்தான். இதில் அவன் செய்த தவறு என்னவெனில், அவனது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் மாற்றாமல் வைத்திருந்தது தான். ஒருமுறை எனக்கான ஈமெயில் செக் செய்ய அவனது ஈமெயில் ஓபன் செய்த போது தான், அவன் வேறு சில பெண்களுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் படங்களை கண்டேன்.

#7 இது இயல்பான உரையாடலில் துவங்கியது… ஒரு சூழலை கூறி அப்போது நீ என்ன செய்துக் கொண்டிருந்தாய் தெரியுமா என்று கேட்டேன். அவன் வேறு யாரோ பெண்ணுடன் இருந்ததை கூறி பேசிக் கொண்டிருந்தான். என்னை ஏமாற்றியதை அவனே தன் வாயால் ஒப்புக் கொண்டான்.

#8 நானும் என் காதலனும் ஒரு இரவு டேட்டிங் வெளியே சென்றிருந்தோம். அப்போது நானும் அவனும் கைகோர்த்து ஒரு நடைப்பயணம் மேற்கொண்டிருந்தோம். திடீரென ஒரு பெண் குறுக்கே வந்து… அவனுடன் பேச துவங்கினாள். சென்ற வாரம் நீயும் நானும் இதே போல, இதே இடத்தில் நடந்து சென்றதை இன்று வரை மறக்கவே முடியவில்லை என்று சிலாகித்து பேசி கொண்டிருந்தாள். ஆனால், அவன் அதே வாரம், அதே நாள்… அவனது குடும்பத்துடன் இந்த இடத்திற்கு வந்து சென்றதாக பொய் கூறியிருந்தான்.

#9 அன்று அவளது பிறந்தநாள். ஆனால், நான் வருவேன் என்று அவள் அறிந்திருக்கவில்லை. நான் சர்ப்ரைஸ் கொடுக்கவே சென்றேன். ஆனால், பார்ட்டியில் என்னை கண்ட அவள் சர்ப்ரைஸாக உணராமல், ஒரு மாதிரி காணப்பட்டால். சரி கிளம்புகிறேன் என்று கூறி, பார்ட்டி முடிந்து அவள் எங்கே செல்கிறாள் என்று அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்தேன். நான் நினைத்தது சரி தான். அவள் வேறொரு ஆணை காண சென்றிருந்தாள். அதன் பிறகு நான் அவளுடன் பேசவே இல்லை.

#10 அவனுக்கே கூச்சமே இல்லை. என்னை எவ்வளவு மோசமாக ஏமாற்ற முடியுமோ, அவ்வளவு ஏமாற்றிவிட்டு. இப்போது நான் திருந்திவிட்டேன். சுத்தமான மனதுடன் இருக்கிறேன் என்று சில மாதங்கள் கழித்து வந்தான். அவன் என்னை ஏமாற்றியது எப்போது தெரியுமா? எனக்கும் அவனுக்கும் திருமணமாக மூன்றே மாதங்கள் இருக்கும் போது. நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டேன். திருந்தியதாக கூறிய அவன்… இப்போதும் பல பெண்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறான்.

#11 எங்கள் காதலுக்கு இன்னும் என் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. ஆனாலும், பெற்றோருக்கு தெரியாமல் அவனை அடிக்கடி பார்த்து வருகிறேன். அன்று அவனது பிறந்தநாள். அன்று நான் அவனை காண இயலாது. பெற்றோர் வீட்டில் இருக்கிறார்கள் என்று பொய் சொல்லிவிட்டு. இன்ப அதிர்ச்சி அளிக்க சென்றேன். ஆனால், அதிர்ச்சி எனக்கே காத்திருந்தது. அவனும், வேறொரு பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தனர். அவனது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டு. அத்துடன் அவனுடனான உறவை துண்டித்து கொண்டேன்.

#12 எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு பெரும் சண்டை. நானும், அவனும் பத்து நாட்கள் பேசிக் கொள்ளவே இல்லை. ஒருசில செய்திகள் மட்டுமே எங்களுக்குள் உரையாடலாக அமைந்தது. என்னை பொறுத்தவரை அது ப்ரேக்-அப் எல்லாம் இல்லை. அவனை எப்படியும் என்னுடன் பேச நேரில் காண வருவான் என்று காத்திருந்தேன். ஆனால், ஒரு மாத காலம் கடந்தது. அவனும் என்னை காண வருவதாக கூறினான். அவன் வருவதாக கூறிய ஒரு நாளுக்கு முன்னர், அவனது எக்ஸ் காதலியிடம் இருந்து எனக்கு ஃபேஸ்புக் செய்தி ஒன்று வந்தது. அதில், அதற்கு முந்தைய நாள் அவன் தன் வீட்டில் தான் இருந்தான் என்றும். அவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறினால். ஒரு மாத இடைவேளை ஒரு நபருக்குள் இத்தனை மாற்றம் ஏற்படுத்துமா? இதுவே திருமணத்திற்கு பிறகு இப்படியான சண்டை வந்தாலும் ஆண்கள் இப்படி தான் நடந்துக் கொள்வார்களா?

Previous articleகட்டில் உறவுக்கு வித்திடும் முத்தத்தின் மொத்த அந்தரங்க இரகசியம்
Next articleசுவையான மொறு மொறு கோலிப்ளவர் மஞ்சூரியன்