Home சமையல் குறிப்புகள் அதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை!

அதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை!

320

சமையல் சமையல்:தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் – 3/4 கிலோ
பாஸ்மதி அரிசி – 3 கப்
வெங்காயம் – 4
தேங்காய்பால் – 1/2 கப்
தயிர் – 350 கிராம்
எண்ணெய் – 3 ஸ்பூன்
நெய் – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது – 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு
புதினா சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு தலா 2
செய்முறை

*மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும். மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.

*மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

*அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

*அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.

*பாத்திரத்தில் உலை நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதிவந்த பின்னர் 3 நிமிடத்தில் வடிக்கவும்.

*பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.

*அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்கமப்பூ அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கேசரி கலரை கரைத்து லேசாக தெளித்து விடவும்.

*அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.

*தம் அடங்கியதும் திறக்கவும். சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.