Home சூடான செய்திகள் உங்களுடைய படுக்கை அறை இப்பிடி இருந்த உறவு குதூகலம்தான்

உங்களுடைய படுக்கை அறை இப்பிடி இருந்த உறவு குதூகலம்தான்

22

இன்பம் அது இன்பம்:படுக்கையறையானது ஒவ்வொரு ஜோடியின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் முக்கியமான ஒரு அங்கமாகவே உள்ளது.
மிகவும் மறக்கமுடியாத மற்றும் தரமான நேரத்தை இங்கேதான் அவர்கள் செலவிடுகின்றனர். எனவே, பள்ளியறையானது ஒரு நிமிடத்தில் உங்கள் மூட் ஏற்றும் விதத்தில் இருப்பது அவசியம்.

பெட்ரூம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் எளிமையான வேலைப்பாடுடன் அமைக்கப்பட்ட கதவுகள், கண்ணாடிகள், மீன் தொட்டி, வண்ணங்கள், கலைநயத்துடன் அமைக்கப்பட்ட சுவர் & தரைகள் மற்றும் ஒலிகள் ஆகியவை காதலின் ஓட்டத்தை அதிகரிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக அமைகின்றன. இந்த அமைப்பில் படுக்கையறை மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அங்குதான் காதல், நெருக்கம், ஓய்வு மற்றும் சந்ததிப் பெருக்கம் போன்ற முக்கியமான உணர்வுகள் மலர்கின்றன. கவர்ச்சியான, மிகவும் இன்பமான படுக்கையறையை உருவாக்குவதற்கான சில குறிப்புகளைக் கீழே காணலாம்

கவர்ச்சியான தோற்றம் ஒரு அந்தரங்கமான மற்றும் தொந்தரவில்லாத கம்பர்ட் ஜோனையே எப்போதும் காதல் விஷயங்களுக்கு ஜோடிகள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு வசதியான மற்றும் கவர்ச்சியான படுக்கை உங்களை அதன் மேல் நழுவி அதன் மென்மையான விரிப்புகளைத் தழுவி இன்பம் கொள்ளத் தூண்டும்.

நறுமணம் நெருங்கிய உறவு நிலை என்பது அனைத்து சென்சுகளாலும் தூண்டப்படும் ஒரு விஷயந்தான். பாலியல் உணர்வைத் தூண்டுவதற்கும், பாலியல் தீபத்தை ஏற்றுவதற்கும் நறுமணம் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். இயற்கைவாசனை மெழுகுவர்த்திகள், தூபவர்க்கம் / ஊதுபத்தி மற்றும் புதிய மலர்கள் அனைத்தும் ஒருவரின் காதல் உணர்ச்சிகளை எளிதில் தூண்டும் ஆற்றல் கொண்டவை. பாலியல் உணர்ச்சியைத் தூண்ட செயற்கை வாசனை திரவியங்களுக்குப் பதிலாக , கஸ்தூரி, சந்தனம், லாவெண்டர் மற்றும் யலாங் யலாங் போன்ற இயற்கை நறுமண எண்ணெய்களை உங்கள் உடலிலோ, படுக்கை விரிப்புகளிலோ அல்லது ஏர் ப்யூரிஃபைரிலோ உபயோகப்படுத்தி முயற்சி செய்யுங்கள்.

மெல்லிய இசை மென்மையான மற்றும் கவர்ச்சியான இசையின் ஒலியானது கண்மூடித்தனமாக உங்களுள் சிற்றின்ப உணர்ச்சிகளைத் தூண்டும் வல்லமை கொண்டது . உங்கள் கவனத்தைத் திசைதிருப்பி உங்கள் ஜோடியை மட்டுமே முக்கிய அங்கமாகத் தோன்றவைக்கும் உலகத்தில் உங்களை அனுப்பும் ஆற்றலைக் கொண்டது இந்த இசை.மென்மையான பின்னணி இசை அல்லது உங்களின் ஒரு பிடித்தமான ஆல்பம் ஒன்றே போதும் உங்களை அந்த உலகத்தில் லயிக்க வைக்க.

அலங்காரம் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும்பொழுது இந்த அழகான/ அன்பான அலங்காரங்கள் உங்களுள் அன்பையும், நெருக்கத்தையும் தோன்றச் செய்கின்றன. அதன் பயன்களால் தம்பதிகள் தங்கள் அன்பைத் தூண்டிவிட்டு ஒரு உணர்ச்சியற்ற சூழலைக் கொண்டு மீண்டும் இணைகின்றனர். உங்கள் படுக்கையறைக்கு கவர்ச்சியைக் கொண்டு வருவது நிறைய செலவை உண்டாக்காது. உங்களுள் நெருக்கத்தை மேம்படுத்த 5 விதமான உணர்ச்சிகளைத் தூண்டினாலே போதுமானது. உங்கள் அறையை அலங்கரிக்கும்முன் மென்மையான நிழல்கள், சாடின் தாள்கள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகள் ஆகியவற்றைக் நினைவில் கொள்ளுங்கள். இந்த எளிய செய்கைகள் உங்களின் சிறப்பான தருணங்களில் நல்ல மூடை உருவாக்க மட்டுமன்றி நீங்கள் ஒவ்வொறு இரவிலும் பகிர்ந்த காதலை நினைவுபடுத்தும் விதத்தில் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.