Home உறவு-காதல் காதல் உறவில் இந்த பதிலை சொல்லுங்க ஆண்களே

காதல் உறவில் இந்த பதிலை சொல்லுங்க ஆண்களே

25

காதல் உறவு:மனித உறவுகளுக்கு நம்பிக்கை மிக முக்கியமான ஒரு அஸ்திவாரம். ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் ஒரு வலிமையைத் தரும். வாழ்க்கையின் துன்பங்களைச் சந்திக்க ஒரு வித தெம்பைத் தரும்.

ஆனால் இந்த நம்பிக்கை ஒருவர் மேல் ஏற்படுவது என்பது ஒரு சவாலான விஷயம். எல்லோருக்கும் எல்லோர் மீதும் நம்பிக்கை ஏற்படாது. அதுவும் வாழ்க்கையில் துரோகத்தை சந்தித்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.

நம்பிக்கை முக்கியமாக உங்கள் வாழ்க்கை துணையாக வருபவரிடம் நீங்கள் அதிக நம்பிக்கை வைப்பதால் மட்டுமே உங்கள் வாழ்க்கை ஓடம் இயல்பாய் பயணிக்க முடியும். ஆகவே உங்கள் துணையை தீர்மானிக்க வேண்டிய தருணங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 கேள்விகளை நீங்கள் கேட்பதால், அவர்களை நம்பலாமா அல்லது வேண்டாமா என்ற ஒரு புரிதலுக்கு உங்களால் வர இயலும். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் உண்மையில் என்னுடன் இருக்க விரும்பியதை உணர்ந்தீர்களா? உங்களை அவர் விரும்பியதற்கான காரணத்தை அவர் தரும் பதிலால் தெரிந்து கொள்ள முடியும். முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்ததா, அல்லது உங்கள் சிந்தனைகளும் யோசனைகளும் அவருக்கு பிடித்ததா, அல்லது உங்கள் சிரிப்பா .. அவர் கூறும் எந்த பதிலில் நீங்கள் உறைந்து போவீர்களோ அப்போது முடிவு செய்து கொள்ளுங்கள் இவர் தான் உங்கள் துணை என்று..

ஒரு கவர்ச்சியான பெண் உங்களை இடித்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு அவர் உங்களைக் கவரும் நோக்கத்தில் நிச்சயம் பொய் தான் சொல்வார். ஆனால், அவர் கூறும் விதத்தில் மரியாதை உள்ளதா அல்லது ஒரு வித தடங்கல் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் ஆண், பெண்களை எப்படி மதிக்கிறார் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கடந்த கால வாழ்க்கையில் உங்களால் சொல்ல கூடிய ஒரு உண்மை இருக்குமானால் அது என்ன? ஒருவரின் கடந்த கால வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரம் மற்றவரால் தெரிந்து கொள்ள முடியாது. அதுவும் சில விஷயங்களை மறைத்து வைக்கவே விரும்புவார்கள். உங்களிடம் அவருடைய கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு தைரியம் அவருக்கு இருந்தால், அல்லது உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய பண்பு இருந்தால், உங்கள் உறவு தொடர்வதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை

உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்வதை நான் சில நாட்கள் விரும்பாமல் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? இதனை நீங்கள் செய்யாமல் வெறும் கேள்வி மட்டுமே கேளுங்கள். இந்த கேள்வியால் உங்கள் சந்தேகம் முழுவதும் தீர்ந்து விடும். அவர் உங்கள் உடலை மட்டும் நேசிக்கிறாரா அல்லது உங்கள் மனதையும் சேர்த்து நேசிக்கிறாரா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் நண்பர்களிடம் என்னை பற்றி என்ன கூறுவீர்கள்? இந்த கேள்வி மூலம், அவருடைய உலகத்தில் உங்களை எப்படி அறிமுகப்படுத்துகிறார். என்பதும் அவர்கள் உங்களை எந்த ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதும் உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அவர் உங்களை எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த அளவிற்கு அவர் புரிந்து வைத்திருகிறாரா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

வேலை அல்லது படிப்பு தொடர்பாக நான் வெளியூரில் இருந்தாலும் உங்களுக்கு என்னை பிடிக்குமா? திருமணத்திற்கு பின், இருவரும் தொலைவில் வாழ்வது எனபது கடினமான செயல் தான். இருந்தாலும் அது பற்றிய அவர் கருத்துக்கள் மிகவும் முக்கியம்.

என்னால் எப்போதாவது மனதளவில் காயப்பட்டு அதனை என்னிடம் கூறாமல் இருந்ததுண்டா? பெண்கள் செய்யும் சில செயல்களால் அல்லது பேசும் வார்த்தைகளால் ஆண்கள் சில நேரம் வருந்துவதுண்டு. சில நேரங்களில் அதனைப் பற்றி அவர்கள் வெளியில் கூறுவதில்லை. இந்த கேள்வி மூலம் அவர் மீது உங்கள் நம்பிக்கை அதிகரிக்காது. ஆனால் உங்கள் மீது அவரின் நம்பிக்கை அதிகரிக்கும். வாழக்கை என்பது இரு வழி சாலை தான். ஆகவே இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதால் வாழக்கையில் இன்பமாக வாழலாம்.