Home இரகசியகேள்வி-பதில் தினமும் சுய இன்பம் செய்வேன் நாளுக்கு ஒருமுறையாவது செய்து விடுவேன்

தினமும் சுய இன்பம் செய்வேன் நாளுக்கு ஒருமுறையாவது செய்து விடுவேன்

361

பாலியல் கேள்விகள்:எனக்கு வயது 24. திருமணமாகாதவன். தினமும் சுய இன்பம் செய்வேன். ஒரு நாளுக்கு ஒருமுறையாவது செய்து விடுவேன். ஆனால், ஒன்று முதல் மூன்று சொட்டுகள் என்ற அளவில்தான் விந்து வருகிறது. சில நாள்கள், ஆறு முதல் எழு சொட்டுகள் என்றளவில் வெளிப்படுகிறது. இது இயல்பானதுதானா? இதற்கு என்ன காரணம்? ஏதாவது குறை உள்ளதா?

நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடும்போது முழுமையான உச்சக் கட்டம் அடைகிறீர்களா என்பது தெரியவில்ல. ஓரளவு உணர்ச்சி வேகம் இருந்தாலும் ஒன்று முதல் நான்கு சொட்டு திவரம் கசியும். ஆனால்,உச்சக்கட்டத்தின் போது இரண்டு முதல் ஐந்து மில்லிவரை விந்து வெளியேற வேண்டும். உச்சக்கட்டம் அடைந்தும் மூன்று முதல் நான்கு சொட்டுகள் தான் வருகிறது எனில், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

விந்துகு, செமினல் வெசைக்கிள் போன்றவை பிறவியிலேயே வளர்ச்சி அடையாமலிருக்கலாம். விந்து பின்புறமாகச் சென்று சிறுநீர்ப் பையில் விழுந்து சிறுநீருடன் வெளியேறலாம். உங்களுடைய விந்தில் உயிரணுக்கள் இல்லாமல் இருக்கத் தொண்ணூறு சதவீத வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிக்கல் மிகவும் அரிதானது.

பதினெட்டு வயது ஆகிறது எனக்கு. சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளவன். எனது ஆணுறுப்பின் மேல் புறத்தில் புண்கள் வந்தன. சாதாரண புண்தானே என்று நினைத்து வெட்கப் பட்டுக்கொண்டு மருத்துவரிடம் செல்லாமல் நானே மருந்து மாத்திரைகள் வாங்கி சரிசெய்து விட்டேன். புண்களும் சரியாகிவிட்டன. இருந்தாலும் பயமாக இருக்கிறது. புண் எதனால் வருகிறது? சுய இன்பத்தினாலா? அப்படி புண் வந்தால் பாலியல் தொடர்பான நோய் ஏதாவது வருமா?

சுய இன்பம் செய்வதால் ஆணுறுப்பில் புண் எதுவும் ஏற்படாது. நோயுள்ள மற்றொருவருடன் உறவில் ஈடுபட்டால் மட்டுமே பால்வினை நோய் தாக்கும். மற்ற இடங்களில் புண் வருவதுபோல் ஆணுறுப்பிலும் சில நேரம் புண்கள் ஏற்படலாம். சர்க்கரை நோய் அல்லது அசுத்தம் காரணமாகவும் ஏற்படலாம். உங்களுக்கு சர்க்கரை உள்ளதா என பரிசோனை செய்துகொள்ளுங்கள். ஆணுறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். யாருடனாவது உறவில் ஈடுபட்டு புண் வந்திருந்தால் செக்ஸ் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

என் வயது 29. கணவர் என்னைவிட பத்து வயதுப் பெரியவர். மூன்று குழந்தைகளுக்குத் தாய் நான். கருத்தடை செய்து எட்டு ஆண்டுகளாகின்றன.

பகலில் தனியாக இருக்கும் நேரத்திலும், இரவில் பிள்ளைகள் தூங்கியதும் சில நேரம் எனக்கு செக்ஸ் ஆசை கள் வரும். இருந்தும் சுய இன்பம் செய்ய எதைப் பயன்படுத்துவது ( விரலால் இரு முறை செய்தும் நகம் பட்டு ரத்தம் வந்தது) என்ற குழப்பத்தாலும், பயத்தாலும் எனது ஆசையை அடக்கிக் கொள்வேன்.

நான் எப்படி, எதைக்கொண்டு சுய இன்பம் அனுபவிப்பது? ஆணுறுப்பைப் போன்ற சாதனம் உண்டா? திருமணமான புதிதில் என் கணவர் தினமும் இரண்டு, மூன்று தடவை உறவு கொள்வார். இப்பொது அவரைத் தொந்தரவு செய்யவும், இது தேவை என்று கேட்கவும் வெட்கமாக உள்ளது.

’வைப்ரேட்டர்’ எனற கருவி எல்லா நாடுகளிலும் இப்போது கிடைக்கிறது. அந்தக் கருவியின் மூலம் நீங்கள் சுய இன்பம் அனுபவிக்க முடியும். கடைக்குச் சென்று அதை வாங்கிப் பயன்படுத்துவது சிரமம் எனில், உங்களது கையால் செய்வதே சிறந்த்து. விரல்களில் நகங்களை வெட்டிய பிறகு நீங்கள் முயற்சி செய்திருந்தால் உங்கள் உறுப்பில் காயம் ஏற்பட்டதைத் தடுத்திருக்க முடியும்.

நான் கடந்த ஐந்தாண்டுகளாக சுய இன்பம் செய்து வருகிறன். சுய இன்பம் செய்யும்போது எனக்குப் பிடித்த நடிகையுடன் உறவுகொள்வதாக மனத்தில் நினைத்துக் கொள்கிறேன். இதனால், பிறகு எனது மனைவியுடன் பாலுறவில் ஈடுபடும்போது சிக்கல் வருமா?

பாலுறவுக்கு உடல் மற்றும் மன எழுச்சி மிகவும் முக்கியம், உடலைத் தூண்டுவது, உறுப்புகளைத் தூண்டுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அவற்றோடு மனத்தையும் தூண்டி கிளர்ச்சியடையச் செய்யும் வேண்டும்.

உண்மையில் கற்பனையான கிளர்ச்சியானது அதிக தூண்டல்களைக் கொடுக்கக்கூடியது. இது தவறல்ல. கற்பனைக் கிளர்ச்சி மனிதனுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது; மனத்திலுள்ள எண்ணங்களுக்கு நல்ல வடிகாலாகிறது. உங்களை உண்மையான பாலுறவுக்குத் தயாராக்குகிறது.

இதைப்பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. கற்பனைக் கிளர்ச்சியில் ஈடுபடுவதில், ஆண் பெண்களிடையே மிகுந்த வேறுபாடு உள்ளது.

ஆண்ளுடைய கற்பனைக் கிளர்ச்சியில், பெண்ணின் உடல் மற்றும் மார்பகங்கள் காட்சியாகளாக கண் முன்னே தோன்றுவது போல் இருக்கும். பல்வேறு நிலைகளில் பாலுறவில் ஈடுபடுவது போன்ற நினைவுகள் தோன்றும்.

பெண்களுக்குக் காதலுனுடன் நெருக்கமாகக் காதலில் ஈடுபடுவது போன்ற நினைவுகள் தோன்றும்.

கற்பனைக் கிளர்ச்சியில் இரண்டு வகை உண்டு.

நடந்த உடலுறவுகளை மனத்தில் கொண்டு வந்து, மீண்டும் நிகழ்வதாக கற்பனை செய்வது.

நடக்காத அல்லது நடக்கவே இயலாத கற்பனை உறவுகளில் கிளர்ச்சி அடைவது.

புதிதாகத் திருமணமான தம்பதியரிடம் இவ்வகைக் கிளர்ச்சி அதிகம் இருக்காது. ஆனால், திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தபின், ஒருவருக்கு ஒருவர் பழகிப் போனவராக மாறிய பின்பு கற்பனைக் கிளர்ச்சி மூலம் பாலுறவில் ஈடுபடுவது மிகவும் இயல்பானது. அதுபோலவே புதிதாக சுய இன்பம் கற்றுக்கொள்பவர்களுக்குக் கற்பனைக் கிளர்ச்சி தேவை இருக்காது.

பல ஆண்டுகள் தொடந்து சுய இன்பம் அனுபவித்தவர்களுக்குக் கற்னைக் கிளர்ச்சிகள் மேலும் வேகத்தைக் கொடுக்கும். கற்பனைக் கிளர்ச்சியில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய இயலாத ஆண்-பெண் இருவரும் கற்பனை கிளர்ச்சியின் மூலம் உச்சகட்டத்தை அடையலாம்.

கற்பனைக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் மிகுந்த செக்ஸ் ஆர்வத்துடன் புதிய புதிய முறைகளில் பாலுறவு இன்பம் பெறுகிறார்கள் என்பதுதான். பல்வேறு ஆராய்ச்சிகளிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

Previous articleபெண்கள் திடிரென உறவுக்கு மறுக்க என்ன காரணம்
Next articleஉங்களுடைய படுக்கை அறை இப்பிடி இருந்த உறவு குதூகலம்தான்