Home சூடான செய்திகள் பெண்கள் எத்தனை வயதில்பிரா அணியவேண்டும் ?

பெண்கள் எத்தனை வயதில்பிரா அணியவேண்டும் ?

153

பெண்கள் மருத்துவம்:பெண்களின் மனதில் பிரா போடலாமா, வேண்டாமா? என்ற கேள்வியால் பலரும் குழம்பி இருக்கின்றனர். இரவு நேரங்களில் உள்ளாடை அணியாமல் உறங்குவது தான் நல்லது என பலர் கருத்து தெரிவிகின்றனர். இந்த கேள்விக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் வகையில் ஒரு ஆய்வு மூலம் விடை பெறலாம்.

பெண்கள் உள்ளாடை( பிரா) அணிவது பற்றி ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில் அவர் கூறியதாவது :-

பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு அழகு கூடுவதோடு நன்மை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் பிரா அணிவதனால் எந்த ஒரு கூடுதல் நன்மை இல்லை. மேலும், தீய விளைவுகள் தான் இது ஏற்படுத்துகின்றன.

இவர் பிரா அணிபவர்கள், பிரா அணியாதவர்கள் என இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

அவர் மேற்கொண்ட, இந்த ஆய்வில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்கள் கலந்துக் கொண்டனர். இதனால், இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்களுக்கு நன்மைகள் விளைவித்துள்ளன என்றார்.

இதே போல், இன்னொரு ஆய்வில் தினமும் பிரா அணிபவர்களை வைத்து நடத்தப்பட்டது.

பெண்கள் இறுக்கமாக பிரா அணிவதனால், இயற்கையாக வளரும் திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் கண்டறிந்துள்ளார். மேலும் பிரா அணிவதனால் தான் மார்பகங்கள் தொங்கும் நிலையை அடைகிறது என்று தெரிவித்தார்.

மேலும், பிரா அணிவது நல்லது என்று சிலர் சொல்வதெல்லாம் விளம்பர யுக்தி. அதனை அணிவதனால் எந்த ஒரு நன்மையையும் இல்லை. பல பெண்கள் தங்களுடைய மார்பகங்கள் தொங்கி விட கூடாது என்பதற்க்காக தான் பிரா அணிவதாக சொல்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு என்ன காரணம் என்றால் பெண்களுக்கு வயதாவது, அதிக குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் இயற்கையாகவே பெண்களின் மார்பகம் தொங்கும் நிலைக்கு வரலாம் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்