Home ஆரோக்கியம் பொது மருத்துவம் இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்க உங்களுக்கு

இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்க உங்களுக்கு

102

பொது மருத்துவம்:இரவில் தூக்கத்தில் இருந்து அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுகிறீர்களா? 6-8 மணி நேர தூக்கத்தில் ஓன்று அல்லது அதற்கு மேல் சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் நீங்கள் நாக்டியூரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சில நேரம் உங்களது உடல் அதிகமான சிறுநீரை உற்பத்தி செய்யலாம் அல்லது உங்களது ஃப்ளேடேர் சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தாமல் முடியாமல் இருக்கலாம்.

அல்லது மேல் சொன்ன இரண்டும் இருக்கலாம். இவற்றுக்கு பல காரணங்கள் உள்ளன. சில காரணங்கள் மருத்தவ சிகிச்சை தேவைப்படலாம் சிலவற்றை நீங்களே சிறந்த பழக்கத்தின் மூலம் குணப்படுத்தலாம். கீழே சில காரணங்களை தொகுத்துள்ளோம்.

அதிகமாக தண்ணீர் பருகுவதால்: நீங்கள் வழக்கத்தை விட அதிகமான நீரை பருகுதல் அல்லது தூங்கும் முன்பு அதிக நீரை பருகுவது, அடிக்கடி உங்களது தூக்கத்தை களைத்து சிறுநீர் கழிக்க தூண்டும். தூங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு குறைவான நீரை பருகுங்கள். இரவில் மது அருந்துதல் அல்லது தேநீர் பருகுதல் கூட காரணமாக இருக்கலாம், எனவே அவற்றை தவிருங்கள். இரவு தூங்க செல்லும் முன்பு சிறுநீர் கழித்து விட்டு தூங்க செல்லுங்கள்.

நோய்த்தொற்று ஏற்படுதல் யூரினரி ட்ராக்ட் இன்பெக்சன் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். அதுமட்டும் அல்லது சிறுநீர் கழிக்கும் பொது வயிறு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வலி ஏற்படுத்தும் அதே நேரம் காய்ச்சலால் அவதிப்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

வயது முதிர்ச்சி உங்களின் வயது ஏற ஏற அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். ஏனென்றால் நமது வயது அதிகமாகும் பொது நமது உடலானது சிறுநீரக அமைப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோனை குறைந்த அளவே உற்பத்தி செய்யும். இதனால் காலை வரை சிறுநீரை அடக்கமுடியாமல் போகலாம். அதுமட்டும் அல்லாமல் வயது அதிகமாகும் பொது உடலின் மற்ற பிரச்சினைகள் சேர்ந்து அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். மேலும் ஆண்/பெண் பாலினம் கூட இந்த பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆண்: வயது அதிகமாகும் போது புரோஸ்டேட் விரிவடைதல் பொதுவானது, இது தீவிரமான பிரச்சினை இல்லை என்றாலும். இதனால் உங்களின் சிறுநீர்ப்பையை (ஃப்ளேடர்) அடிக்கடி காலி செய்ய தூண்டும்.

பெண்களுக்கு… மாதவிடாய் (மெனோஃபேஸ்) முடிந்த பிறகு, உடலானது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைத்துவிடுகிறது. இது உங்கள் சிறுநீர் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்தி நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். குழந்தை பெற்ற பெண்களின், இடுப்பில் உள்ள தசைகள் பலவீனமாதல் கூட காரணமாக இருக்கலாம்.

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மருந்துகள் நமது உடலில் உள்ள நீரை அதிகமாக வெளியற்றி நாம் அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்யும். இது போன்ற சூழ்நிலைகளில் உங்களின் மருத்துவரை அணுகி நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் இதற்கு காரணமா என தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை ஆம் என்றால் மருந்துகளை வழக்கத்தை விட சற்று முன்னதாகவே எடுத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் மருத்துவரிடம் வேறு மருந்துகளை பரிந்துரைக்க சொல்லலாம்.

தூக்கமின்மை ஒருசிலர் இரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுவதில்லை, அதே நேரம் எழுந்து விட்டால் சிறுநீர் கழிக்க தோன்றும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளன அவற்றில் சில ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம், ஹாட் ஃபிளாசஸ், நாள்பட்ட வலி அல்லது மன உளைச்சல் ஆகியன. தூக்கத்தில் மூச்சுத்திணறல் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். பொதுவாக தூக்கமின்மையை நிவர்த்தி செய்தலே இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை குறைத்துவிடலாம்.

இதய பிரச்சினைகள்: உங்கள் இதயத்தின் டிக்கர் சரியாக ரத்தத்தை பம்ப் செய்யாதபோது, உடல் பாகங்களின் நீர் சரியாக வெளியேற்றப்படாமல் இருக்கும். குறிப்பாக உங்கள் கணுக்கால் பகுதியில், எனவே நீங்கள் படுக்கும் பொழுது நமது உடல் கூடுதல் திரவத்தை வெளியே தள்ளுகிறது. அது உங்கள் சிறுநீர்ப்பையை நிரப்புகிறது, அதனால் உங்களுக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதை தடுப்பதற்கு பகலில் சிறிது நேரம் கால்களை நீட்டி ஓய்வெடுப்பதன் மூலம் குறைக்கலாம் அல்லது கம்ப்ரஸன் சாக்ஸ் அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வேறு காரணங்கள் ஒரு சில முயற்சிகள் பலன் தராத பொழுதுஉடனடியாக மருத்துவரை அணுகவும். ஏனென்றால் உங்கள் உடலின் வேறு பிரச்சினைகள் உங்கள் சிறுநீர்பையின் இயக்கத்தை பாதித்திருக்கலாம். அவற்றில் சில பிரச்சினைகள்: • சிறுநீர்ப்பைக் கட்டி • புரோஸ்டேட் கட்டி • அதிகப்படியான திறன் கொண்ட சிறுநீர்ப்பை • இண்டெர்ஸ்ட்டிடில் சிஸ்டிடிஸ் • கர்ப்பம் • உடல் பருமன் அதுமட்டும் அல்லாது உங்கள் உடலை அதிகமான சிறுநீரை உண்டாக்க தூண்டும் நோய்களான: • நீரிழிவு (டயாபெட்டீஸ்) • டயாபெட்டீஸ் இன்சிபிடஸ் • கல்லீரல் செயலிழப்பு • அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்கள் • நீங்கள் ஏற்கனவே சிகிச்சை எடுத்திருந்தால் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

மருத்துவ சிகிச்சை தேவையா? இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்திருப்பது மறுநாள் பகல் பொழுதில் கவனக்குறைவு, மனஅழுத்தம் அல்லது பிற உடல்நல பிரச்சினைகளை கொடுக்கும். உங்களின் வயது அதிகமாகும் பொழுது ஏற்படும் நாக்டியூரியா நீங்கள் கீழே விழுந்து உங்கள் எலும்புகளை முறித்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. மருத்துவரை சந்திப்பதற்க்கு முன் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு, நேரம் மற்றும் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு, கால இடைவெளி ஆகியவற்றை குறித்து கொள்ளவும். உங்கள் மருத்துவர் கீழ் கொடுக்கபட்டுள்ள விவரங்கள் கேட்கலாம். • நீங்கள் தூங்கும் விதம் • பகல் பொழுதில் ஏற்படும் சோர்வு • நீங்கள் தற்சமயம் உட்கொள்ளும் மருந்தின் விவரங்கள் • உங்கள் உடலில் உள்ள வேறு அறிகுறிகள்.