Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தொப்பை வயிற்றை இயற்கைமுறையில் குறைக்கும் வழிமுறைகள்

தொப்பை வயிற்றை இயற்கைமுறையில் குறைக்கும் வழிமுறைகள்

145

உடல் எடை கட்டுப்பாடு:அதிகமான உணவை உட்கொண்ட பின்பு, சமிபாட்டுத் தொகுதியின் வெவ்வேறு இடங்களில் உள்ள தசைப் பகுதிகள் அசைய முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால் வயிறு உப்பிக் கானப்படுக்கின்றது. அவ் வேளைகளில் வயிற்றுப் பகுதிகளில் கோளாறுகள் மற்றும் அழுத்தம் அதிகமாகும்.

போதியளவு உணவின்மை, உணவின் மீதுள்ள வெறுப்பு மற்றும் உணவுகளின் உட்பொருட்களின் தன்மையால் வயிறு உப்பி போகின்றது இதனால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. ஆனால் இவற்றை இயற்கையாக குணப்படுத்த முடியும்.

குறைந்த நேரத்தில் வயிறு உப்புவதை குணமடையச் செய்யும் வழி முறைகள்.

1. மெதுவாக உணவை உட்கொள்ளுதல்.

உணவை சமிபாடடையச் செய்ய உடலுக்கு நேரம் தேவைப்படுகின்றதது.இதனால் நாம் உணவை மெதுவாக உட்கொள்ள வேண்டியது அவசியமானது.

2. புரோபயட்டிக்

புரோபயட்டிக் எடுத்துக்கொள்வதனால் சமிபாட்டு பிரச்சனைகளை தீர்த்து வாயு உருவாகுவதை தடுக்கும்.

3. ஒவ்வாத உணவுகளை தவிர்த்தல்

உணவு ஒவ்வாமையாலும் வயிறு உப்பச் செய்கின்றது.குளுட்டோன்,லக்டோஸ்,கோதுமை,ப்ரக்டோஸ்,முட்டை இவையே அதிகளவில் ஒவ்வாமையை ஏற்படுதும் உணவுகள்.எனவே இவற்றை தவிர்த்தல் சிறந்தது.

4. கொழுப்பு உணவுகளை குறைத்தல்.

கொழுப்புப் பொருட்கள் சமிபாடடைய தாமதமாகும். எனவே இந்தப் பொருட்களை குறைவாக உட்கொள்ளுதல் சிறப்பானது.

5. சர்க்கரை அதிகமுள்ள பானங்களைத் தவிர்த்தல்.

சர்க்கரை ஆதிகமுள்ள சோடா, சக்தி தரும் பானங்கள், மதுபான வகைகள் வயிறு உப்புதல் போன்ற பல சமிபாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

இவற்றை உட்கொள்வதை குறைப்பதுடன், சர்க்கரை இல்லாத உணவுகளிற்கு முக்கிய இடத்தை கொடுத்தல் சிறந்தது.

6. குறைவான அளவில் FODMAP உணவுகளை உட்கொள்ளுதல்.

சமிபாடையாத மாப்பொருட்களையே FODMAP என்கின்றனர். இவை குடலில் கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனால் 16% மேற்பட்டவர்கள் சமிபாட்டு தொகுதி பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.

7. மலச்சிக்கலை சீராக்குதல்.

வயிறு உப்புவதனால் மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவானதே. அவ் வேளைகளில் உடலில் மக்னீசியத்தின் அளவை மேம்படுத்துவதுடன் உடற்பயிற்சி செய்து வருதல் சிறந்தது.

8. வாயுக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்தல்.

கார்பனேட் படுத்திய பான வகைகளில் வாயுக்கள் அதிகளவில் கரைந்து காணப்படும். இவை வயிற்றை அதிகளவில் உப்பச் செய்கின்றன.

9. சமிபாட்டு நொதிகளின் நிரப்பிகளை உட்கொள்ளுதல்.

உணவை சமிபாடடையச் செய்யும் நொதிகளின் நிரப்பிகளை உட்கொள்வதனால் சமிபாட்டை இலகுபடுத்தி, வயிறு உப்புதலை குறைக்க முடியும்.