Home ஆரோக்கியம் பெண்களின் முலைப்பால் குடிப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

பெண்களின் முலைப்பால் குடிப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

1593

பொது மருத்துவ தகவல்:அதிகம் வர்ணிக்கப்படுவது பெண்களின் மார்பகம்தான். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து அதற்கு அத்தனை பெரிய கவர்ச்சி. இணைகளுக்கு இடையே ததும்பல்களை உருவாக்கக் கூடிய அந்த மார்பகம் தாய்மை அடைந்ததும் புனிதமாக்கப்படுகிறது. இந்நிலையில தான் நவீன யுவதி ஒருத்தி, தன் காதலனுக்கு பால் கொடுப்பதற்காக வேலை உதறி விட்டாள் என்ற தகவல் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது ஒருபுறம் இருக்க, உண்மையில் தாய்ப்பாலின் அசாத்தியமான ஆற்றல்கள் இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்கவில்லை. தாய்ப்பாலில் தங்கியுள்ள இயற்கையான ஊட்டச் சத்துக்களும், எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கலவைகளும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

திரவ தங்கம் மார்பக பாலில் உள்ள பிரத்யேகமான பண்புகளால் அது திரவ தங்கமாக வர்ணிக்கப்படுகிறது. தாயையும், சேயையும் உளவியல் ரீதியாக இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. குழந்தையின் தேவைக்கு மட்டுமே சுரக்கும் அந்த அற்புத அமுதம், தடுப்பூசிக்கு ஒத்த மருத்துவ குணத்தை பெற்றுள்ளது. தாய்ப்பாலில் உள்ள மெல்டோனின் என்ற அதிசய கலவை, குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் பலனளிக்கும் வல்லமையை தன்னகத்துக்கள் ஒளித்து வைத்துள்ளது.

விற்பனையில் தாய்ப்பால் மார்பகத்தில் சுரக்கும் பாலை பெரியவர்கள் அதிகம் விரும்பத் தொடங்கி விட்டார்கள். வணிக ரீதியாகவும் தாய்ப்பால் விற்பனைக்கு வந்து விட்டது. கறுப்புச் சந்தைகளில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்ட மார்பக பாலின் வரவேற்புக்கு பல காரணிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றன.

கலப்படம் இல்லாதது இந்த நவீன யுகத்தில் இயற்கை உணவுகள் குறித்த பிரக்ஞை பரவலாக வந்து விட்டது. நோய்களில் இருந்து தப்பிக்க இதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் தாய்ப்பாலையும் வயது வந்த ஆண்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது

சூழலுக்கு உகந்த தாய்ப்பால் பால் விற்பனையை பல்வேறு நிறுவனங்கள் புற்றீசல் போல தொடங்கி விட்டன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிராண்டுகள் விற்பனைக்கு வருவதே பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இவற்றுடன் ஒப்பிடும் போது மார்பகப்பால் ஆகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இது குழந்தைகளுக்காக மட்டுமே சுரக்கக்கூடியது. ஆதலால் பெரியவர்கள் மார்பக பால் அருந்துவதற்கு ஆசைப்படாமல் வேறு பானங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

கிரியா ஊக்கி மார்பக பாலை அருந்தக் கூடிய ஆண்கள் பலர், ஆற்றலை அதிகரிப்பதாக தெரிவிக்கிறார்கள். இது பதப்படுத்தி பாக்கெட்டில் வரும் பாலை விட சிறந்த ஒன்றாக கருதுகிறார்கள். சந்தையில் ஏராளமான பிராண்டுகளில் பாலை கூவிக் கூவி விற்கும்போது இதனை விரும்புவது ஏன் என்ற கேள்வியையும் சாதாரணமாக கடந்து போய் விட முடியாது.

தசை வலிமைக்கு விசை பெண் ஒருத்தி கமுக்கமான ஒரு இடத்தில் தனது காதலனுக்கு முலைப்பாலை ஊட்டுவதில் பல சுவாரஸ்ய செய்திகள் அடங்கியுள்ளன. காமதேனு பசுவைப் போல மார்பகங்களில் ஊற்றெடுக்கும் பாலில் இயற்கையான சத்துக்கள் பொதிந்திருக்கிறதாம். அது தசையின் வலிமையை உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

முலைப்பாலில் உடல் எடை பூசி மெழுகியது போல தோற்றத்தை ஏற்படுத்த உடல் எடையை கூட்டும் ஆர்வம் பெரும்பாலானோருக்கு இருக்கும். அதனை விரும்பும் பலரில் எத்தனை பேர் தாய்ப்பாலின் சிறப்பு குறித்து தங்கள் மனைவியிடம் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்குமாறும் எந்த ஆணும் சொல்லவில்லை.

பருக்களுக்கு தீர்வு (ACNES) பல பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போத எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஆக்னஸ் என்ற பருக்கள் தோன்றும். இது பிரசவத்துக்குப் பிறகும் சிலருக்கு நீடிக்கும். இதற்கு தாய்ப்பால்தான் அருமருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அதில் ஆன்டிபயாடிக் என்ற எதிர்ப்பு சக்தி நிரம்ப உள்ளது.

தொண்டை புண் பிறந்த பச்சிளம் குழந்தைகள் சிலநேரம் தொண்டை புண்களால் பாதிக்கப்படும்.திரவ உணவைக் கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கதறும்.அப்போது வலுக்கட்டாயமாக தாய்ப்பாலை ஊட்டுங்கள். புண்கள் குணமாகிவிடும். சோர்வுகளில் இருந்து குழந்தைகளை எழுச்சி பெறச் செய்யும் அற்புத கலவைகள் அதில் உள்ளதன. ஆண்கள் இதற்கு ஆசைப்பட வேண்டாம்.

இ கோலிக்கு நிவாரணி பாக்டீரியாக்களால் உருவாகும் இ கோலி என்ற நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது தாய்ப்பால். இ கோலியால் பாதிக்கப்பட்ட ஒரு எலிக்கு தாய்ப்பாலை கொடுத்தில் நோய் குணமாகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டதால் இது முட்டாள்தனமான நம்பிக்கையாக கருதக் கூடாது.

கிரோன் நோய் எதிர்ப்பு சக்தி அழற்சி வகையைச் சேர்ந்த கிரோன் நோயை விரட்டி அடிக்கக்கூடிய சக்தியை தாய்ப்பால் தன்னகத்தே வைத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள புரதம் அபாரமான தன்மைகளைக் கொண்டது.

நீரிழிவு நோய்க்கு எதிரி மக்களின் வாயையும், வயிற்றையும் கட்டிப்போடும் நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. அவற்றை அடியோடு ஒழிக்க தாய்ப்பால் நல்ல நிவாரணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் உள்ள ஸ்டெம் செல்கள் நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கீழ்வாதம் தாய்ப்பாலில் உள்ள லாக்டோபெனின் என்ற கலவை கீழ்வாத நோயை அகற்றுவதற்கு பயன்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் முலைப்பால் பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியதாகவே இருக்கும். ஆதலால் வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்ப்பாலை அருந்திப் பாருங்கள்.

புற்றுநோய்க்கு அருமருந்து நீண்ட காலமாக மக்களை உயிர் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு நோய். இதில் ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என உலகமே எதிர்பார்க்கிறது. ஆனால் தாய்ப்பால் இதற்கு நல்ல மருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் உள்ள ஹேம்லெட் என்ற சேர்மத்துக்கு, புற்று நோய் செல்களை அழிக்கக்கூடிய வலிமை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப் பூர்வ ஆய்வுகள் வெளியாகவில்லை.

எச்சரிக்கை இந்த நவீன யுகத்தில் மனிதர்களின் ஆசைகள் வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. பெரியவர்கள் பலர் தாய்ப்பாலை அருந்த துடியாப் துடிப்பதாக காதுவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் சுகாதாரமானது என்கிறார்கள். உடலுக்கு வலிமையை தரக்கூடியது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் ஆபத்துகள் அதிகம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். •மார்பகங்களில் சுரக்கும் பால் குழந்தைகளுக்கானதே தவிர, பெரியவர்களுக்கோ, ஆண்களுக்கோ அல்ல. குழந்தைகளுக்கு ஒத்துப் போகும் முலைப்பால் பெரியவர்களுக்கும் பொருந்தும் என கருதக்கூடாது. •கறுப்புச் சந்தைளில் தாய்ப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பான விளம்பரங்கள் இணையதளங்களிலும் வெளியாகி வருகிறது. விளம்பரங்களை பார்த்து பயன்படுத்தாமல், நம்பகமான இணையதளமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் •மார்பகப் பால் உண்மையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்துதான் பெறப்படுகிறதா என்று தெரியாமல் வாங்கி உபயோகிக்கிறார்கள். இதில் ஆபத்து அதிகமாக உள்ளது. • தாய்ப்பால் கிடைக்கிறதே என்ற ஆர்வத்தில் வாங்கி குடித்து விடாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு எச்.ஐ.வி தொற்றோ, ஹெபடைட்டிஷோ உங்கள் உடலை பாதிக்கலாம். •காதலி ஒருத்தி காதலனுக்கு முலைப்பால் கொடுத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அது நாகரீகமும் கிடையது. இதனை நம்பி மார்பக பாலை அருந்த முனைந்தால் ஆபத்துதான் நேரும்

• மார்பக பால் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இதன் பிறகு அதனை உபயோகிப்பது குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும். பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாம் என்று எந்த ஆய்வுகளும் பரிந்துரைக்கவில்லை