Home ஆண்கள் ஆண்களின் ஆடை இருக்கமாக இருந்தால் ஆண்மை இல்லாமல் போகும்

ஆண்களின் ஆடை இருக்கமாக இருந்தால் ஆண்மை இல்லாமல் போகும்

130

ஆண்மை பிரச்சனை:இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குழந்தை பேறுக்காக 656 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கான காரணம் குறித்து பாஸ்டனில் உள்ள லிடியா மிங்குயஷ்-அலார்சன் நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் அனைவரும் 18 முதல் 56 வயது நிரம்பியவர்கள். குழந்தை பேறுக்காக சிகிச்சை பெறும் பெண்களின் கணவன்மார்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அவர்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் குறைந்த எண்ணிகையிலான உயிரணுக்கள் இருந்தன. அவை விரைவாக சென்று கருமுட்டையை அடையும் தன்மையற்றவையாக இருந்தன.

அதே நேரத்தில் தளர்வான உள்ளாடை அணிந்த ஆண்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் உயிரணுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும். 25 சதவீதம் கூடுதல் வீரிய சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் உள்ளவர்களாகவும் இருந்தனர். விந்து உற்பத்திக்கு உடலின் வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரிக்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்தை அதிகரித்து விந்து உற்பத்தியை குறைக்கிறது.

அதே நேரத்தில் தளர்வாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்துக்கு பதிலாக குளிர்ச்சியை ஏற்படுத்தி விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதுவே இவர்களின் குழந்தை பேறுக்கு காரணமாக அமைகிறது.

எனவே இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரை ‘மனித உற்பத்தி’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்தை நிபுணர்கள் பலர் ஆதரித்துள்ளனர்.

Previous articleவாய்வழி உறவால் அந்தரங்க நோய்கள் வருமா?
Next articleபெண்களின் முலைப்பால் குடிப்பதால் என்ன ஆகும் தெரியுமா?