Home ஜல்சா காண்டம் விளம்பர சர்ச்சை – அசராத சன்னி லியோன்!

காண்டம் விளம்பர சர்ச்சை – அசராத சன்னி லியோன்!

27

சமீபத்தில் வெளியான காண்டம் விளம்பரம் ஒன்றில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மிகவும் ஆபாசமாக நடித்திருப்பதாகக் கூறி பெண்கள் அமைப்பு அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்தி படங்களில் கவர்ச்சியில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஒரு காண்டம் விளம்பரத்தில் நடித்தார். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த விளம்பரம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சன்னி லியோன் இதுகுறித்து கூறியதாவது:

ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்.

இதற்காக வரும் பிரச்னைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து எனக்குத் எதுவும் தெரியாது என்று கூறினார்.

Previous articleஉங்கள் அந்தரங்க வாழ்க்கையைப் பத்தி உங்க ராசி என்ன சொல்லுது தெரியுமா?..
Next articleஎளிய முறையில் செய்யக்கூடிய ஸ்டப்டு மட்டன் பால்ஸ்