Home சமையல் குறிப்புகள் எளிய முறையில் செய்யக்கூடிய ஸ்டப்டு மட்டன் பால்ஸ்

எளிய முறையில் செய்யக்கூடிய ஸ்டப்டு மட்டன் பால்ஸ்

38

ஸ்டப்டு மட்டன் பால்ஸ் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இந்த ரெசிபி மிக அருமையான சுவையுடன் இருக்கும். ஸ்டப்டு மட்டன் பால்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எலுமிச்சை – 1
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
முங்டடை- 1 ( வேக வைக்கவும்)
நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டீஸ்பூன் ( நறுக்கவும்)
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 டீஸ்பூன்
முட்டை – 1
பிரட் – 4
மட்டன் – 200 கிராம்
கொத்தமல்லி தழை – 2 டீஸ்பூன் ( நறுக்கவும்)
எண்ணெய் – 3 டீஸ்பூன்
இஞ்சி தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் வேக வைத்தமுட்டை துருவிக் கொள்ளவும். அதனோடு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய பௌலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

மற்றொரு பௌலில் மட்டன் கீமா, பிரட்டின் வெள்ளைப்பகுதி, வெங்காயம், மஞ்சள்தூள், கரம் மசாலா, தனியதூள், இஞ்சி தூள், நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை, சீரகம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, உடைத்த ஒரு முட்டை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த மட்டன் கலவையையும், வேக வைத்த முட்டை கலவையையும் சேர்த்து சிறிய பால் போன்ற வடிவத்தில் பிடித்து கொண்டு அடித்து வைத்துள்ள முட்டையில் இட்டு பிரட்டினால் ஸ்டப்டு மட்டன் பால்ஸ் தயார்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஸ்டப்டு மட்டன் பால்ஸை எண்ணெய்யில் இட்டு பொரித்தெடுக்கவும். சுவையான ஸ்டப்டு மட்டன் பால்ஸ் ரெடி!

சூடாக கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சேர்த்து பரிமாறலாம்.