Home ஆரோக்கியம் உங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்

உங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்

154

பொது மருத்துவம்:சுத்தம் சுகம் தரும் என்பதற்கிணங்க நாம் அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக நாம் அழுக்காக இருந்தால் உடனே நல்ல குளியல் ஒன்றில் ஈடுபடலாம். இதன் மூலம் உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்கும். என்ன தான் குளியல் மேற்கொண்டாலும் எமது உடம்பில் உள்ள ஒரு பகுதியில் அழுக்குகளை அகற்ற முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், எமது உடம்பில் உள்ள தொப்புளில் அதிகபடியான அழுக்குகள் உள்ளன. இவை கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அதிகூடிய அழுக்கு உள்ள பகுதி இதுவெனக் குறிப்பிடுவது பொருத்தமானது.

தொப்புளில் அதிகபடியான பக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் என்பன உள்ளன. தொப்புளின் அமைப்பு காரணமாக ஆடைகளில் உள்ள பைபர்கள், இறந்த செல்கள், வியர்வை, நாம் பயன்படுத்தும் லோஷன்கள் மற்றும் சோப் என்பன தங்கி விடுகின்றன. அதனால் பக்டீரியாக்கள் என்பன அதிகளவில் உருவாக காரணமாகின்றது. அதுமட்டுமின்றி சில சமயங்களில் துர்நாற்றமும் வீச ஆரம்பிக்கும்.

அதுசரி, தொப்புளை எவ்வாறு சுத்தம் செய்வது?

01. உப்புத் தண்ணீர்
வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பை கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரைக் கொண்டு தொப்புளின் எட்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சிறிய துணித் துண்டு ஒன்றை உபயோகிக்கலாம்.

02. மதுசாரம்
சிறுதுண்டு பஞ்சொன்றை எடுத்து அதில் சிறிதளவு மதுசாரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை உபயோகித்து தொப்புளை சுத்திகரிக்க வேண்டும். சுத்தம் செய்த பின் சாதாரண தண்ணீரால் கழுவி விட வேண்டும்.

பொதுவாக குளியல் மேற்கொள்வதற்கு முன்னதாக தொப்புளை சுத்தம் செய்வது சிறந்தது. எனவே மேற்கூறிய வழிமுறைகளைக் கையாண்டு தொப்புளை சுத்தம் செய்யுங்கள்.