Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள் தடுக்க பெற்றோருக்கு அறிவுரை

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள் தடுக்க பெற்றோருக்கு அறிவுரை

16

கோடைகால முகாம்களில் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டும். முக்கியமான உடல்உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறவேண்டும். அதோடு ‘உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை உனது தனிப்பட்ட உறுப்புகள்.

அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரியவைக்கவேண்டும். தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்.

உங்கள் குழந்தை கோடைகால பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பினால், ‘எங்கேயாவது போ.. எதையாவது கற்றுக்கொள்..’ என்று அனுப்பிவிடாமல், பயிற்சி கொடுக்கும் அந்த அமைப்பு பற்றி முழுமையாக விசாரியுங்கள். அவர்களது பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.

பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொடுதல்களை உருவாக்கினால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள்..”