Home ஜல்சா கைதியிடம் மயங்கிய அழகிய பெண் போலீஸ்! சிறையில் செய்த காரியம்

கைதியிடம் மயங்கிய அழகிய பெண் போலீஸ்! சிறையில் செய்த காரியம்

44

சுவிட்சர்லாந்தில் பெண் போலீசை காதலித்து சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கூடுதலாக 6 மாதம் தண்டனை வழங்கியுள்ளது.சிரியாவை சேர்ந்த ஹாசன் கிக்கோ என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனையடுத்து அவர் சூரிச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அதே சிறையில் பெண் காவலராக பணியாற்றியவருக்கும் கைதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.இதனையடுத்து ஹாசன் வெளியே செல்வதற்காக காதலியிடம் உதவி கேட்டுள்ளார். ஹாசன் மீது காதல் மயக்கத்தில் இருந்த அவரும் இதற்கு உடந்தையாக தப்பிக்க உதவி செய்துள்ளார்.பின்னர் இருவரும் தப்பித்து இத்தாலி நாட்டிற்கு சென்றனர். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து போலீசார் கைதியை பிடிப்பதற்காக இத்தாலி நாட்டு போலீசின் உதவியை நாடியுள்ளனர்.

இதனால் இத்தாலி போலீசார் மறைந்து வாழ்ந்து வந்த பெண் போலீசையும், கைதியையும் கைது செய்து சுவிட்சர்லாந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் போலீசார் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கெனவே 4 ஆண்டு தண்டனை உள்ளது. மேலும், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.