Home குழந்தை நலம் குழந்தைக்கு எதிர்காலத்தில் மாறுகண் பிரச்சனையே வராமல் இருக்க, தூங்கவைக்கும் போது மட்டும் இந்த மாற்றம் வேண்டும்!

குழந்தைக்கு எதிர்காலத்தில் மாறுகண் பிரச்சனையே வராமல் இருக்க, தூங்கவைக்கும் போது மட்டும் இந்த மாற்றம் வேண்டும்!

93

எனக்கு குழந்தை பிறந்ததில் இருந்து எனது மாமியாருக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் எப்போதும் சண்டையாகவே இருக்கும். என் மாமியார் குழந்தைக்கு மை வைத்தால் கூட அவர்களே இயற்கைமுறைப்படி காய்ச்சி குழந்தைக்கு இடுவார். என் வீட்டுக்காரரோ வெளிநாட்டில் படித்தவர். அதனாலே நம்மூர் வழக்கங்களில் அவருக்கு கொஞ்சம் பயம் இருக்கும். குழந்தைக்கென்றே பிரசித்து பெற்ற ப்ராஃண்டுகளையே பயன்படுத்த சொல்வார். இதனாலே எங்க வீட்டுக்குள் எப்போதும் சத்தமாகவே இருக்கும். இப்போது அடுத்த பிரச்சனை, இவர் வாங்கிவந்த Baby Swing bed இல் தான் குழந்தையை தூங்க வைக்க வேண்டுமாம். என் மாமியார் என்னுடைய காட்டன் புடவையில் தூளி கட்டி தூங்க வைக்க சொல்கிறார். தூளியில் குழந்தையை தூங்குவதன் நன்மை என்னவென எனது மாமியார் கணவருக்கு சொன்னதும் ஒரு வழியே சண்டை முடிவுக்கு வந்தது.

#1. தூளியில் படுக்க வைப்பதால் குழந்தையின் முதுகெலும்பு பாதுகாக்கப்படுமாம். குழந்தை புரண்டு படுத்தால் கூட கீழே விழுந்து விடுவான் என்ற பயம் இல்லை.

#2. பூச்சி, வண்டு, கொசு இவற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் கொசு வலை போல செயல்படுமாம். தூளியில் குழந்தை வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் உறங்குவானாம்.

#3. தூளி ஆட்டும் போது தாயின் முகத்தையே குழந்தை பார்த்து கொண்டிருப்பதால் மாறுகண் பிரச்சனை எதிர்காலத்தில் இருக்காது.

#4. அம்மா எப்போதும் கூடவே இருப்பது போன்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படவே, தூளியை அம்மாவின் சேலையைக் கொண்டு கட்டுவார்களாம்.

#5. அடுத்து முக்கியமானது. தூளியில் குழந்தைகளை படுக்க வைத்தால் செரிமான கோளாறு, குழந்தை கதக்குதல் போன்றவை ஏற்படாது.

#6. தூளி முன், பின் வேகமாக அசையும் போது குழந்தைகள் தொடர் கண் சிமிட்டுதலுக்கு உள்ளாகி வேகமான காற்றோட்டத்தால் விரைவில் தூங்கவும் செய்கின்றனர்.

#babyswingbed: “தோளில் ஆடும் சேலை, தொட்டில் தான் பாதிவேளை” என்றபடி இருக்க வேண்டும் என என் மாமியார் சொன்னதும் எனக்கும் பல விஷயங்கள் புரிந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.