Home குழந்தை நலம் பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்

பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்

21

Captureதினமும் ஏதேனும் ஒரு வேளை உணவையாவது, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும்.

குழந்தைகளின் எதிரே, உணவு மீதான விருப்பு வெறுப்புகளைக் காட்டாதீர்கள்.

காபி / டீ அல்லது ஆரோக்கியத்துக்காக விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் எதையும் மருத்துவர் / ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை இன்றி குழந்தைக்குப் பழக்கப்படுத்தாதீர்கள்.

சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம். இதனால், வயிற்றுக்குத் தேவைப்படும் சரியான அளவு சாப்பிட முடிவதோடு, நன்கு செரிமானமும் ஆகும்.

பிரார்த்தனை செய்துவிட்டுச் சாப்பிடுவது, உணவை நமக்காகப் பயிர் செய்யும் விவசாயி முதல், அனைவரையும் ஒரு நொடி நினைத்துவிட்டுச் சாப்பிடுவது… இவை எல்லாமே குழந்தையிலேயே பழக்கவேண்டியவை.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும், சமையலில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்துவது நல்லது. ஏனெனில் அம்மாக்களும் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில், தானே சமைத்துச் சாப்பிடப் பழகிக்கொள்வது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பிறரைச் சார்ந்திருக்கவும் வேண்டியதில்லை.