Home சமையல் குறிப்புகள் மசாலா முட்டை புர்ஜி செய்வது எப்படி

மசாலா முட்டை புர்ஜி செய்வது எப்படி

20

Captureதேவையான பொருட்கள் :

முட்டை – 4
தக்காளி – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
கொத்தமல்லி – சிறிதளவு
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை சிட்டிகை
சாட் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி சேர்த்து வதக்கி தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கிய பின் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

* இப்போது உப்பு சேர்த்து கிளறிய பிறகு முட்டையை ஊற்றி நன்றாக கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

* முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கரம் மசாலா தூள் தூவி இறக்கவும்.

* இந்த முட்டை புர்ஜியை தோசை, சாண்விச், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

* டயட்டில் இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து செய்து சாப்பிடலாம். மற்றவர்கள் மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைக்கலாம்.

Previous articleபிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்
Next article15 வயதில் திருமணம், பாலியில் வன்கொடுமை, சோனாகச்சி வாழ்க்கை – விலைமாதுவின் கண்ணீர் கதை!