Home பெண்கள் உடல் கட்டுப்பாடு திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்!

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்!

26

04-1423036147-1weightlossபொதுவாக சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இது அவரவர் பரம்பரை பரம் பரையாக வருவது. இவர்களுக்கு
எந்தவிதமான நோய்களும் இருக்காது. ஆனால் வயது மற்றும் உயரத்திற் கேற்ற‍வாறு உடல்எடை ஆரோக்கியமாக இருந்து எந்த வித காரணங்களுமின்றி திடீரென்று உடல் எடை குறைந்தால், உங்கள் உடல் நோய்களின் பாதிப்புக்குள்ளாக தொடங்கியிருக்கிறது என்றே அர்த்தம்.

எந்தெந்த நோய்கள் வந்தால் திடீரென்று உடல் எடை குறையும்.
1) காச நோய்
2) நீரிழிவு நோய்
3) கல்லீரல் நோய்
4) சவலை நோய்
5) சிறுநீரக நோய்
6) மன நோய்
7) குடல் புழுக்கள்
8) அஜீரணம்
9) சில பால்வினை நோய்கள்

என்று பல்வேறு நோய்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் மேற் கூறிய 9 நோய்களும்தான் நமது உயிருக்கே உலை வைக்கும் நோய்கள் என்பதால் இதனை மட்டும் பட்டியலிடப்பட்டுள்ள‍து.
இந்நோய்களின் இருந்து பூரண குணமடைந்து பழைய படி ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு, உடல் எடை திடீரென குறையும்போதே தகுந்த மருத்துவரை அணுகி உடலை முழுபரிசோதனைசெய்து கொள்ளவேண் டும். பரிசோதனையில் ஏதாவது நோயின் தாக்க‍ம் இருந்தா ல், அதற்குரிய சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக் கொண்டால் மட்டுமே முடியும்.