Home ஜல்சா அவள் அவ்வப்போது அவரது கழுத்தையும் கெட்டியாக பிடித்தாள்

அவள் அவ்வப்போது அவரது கழுத்தையும் கெட்டியாக பிடித்தாள்

27

indian-couple-on-motorbike-bh2431வாகனங்கள் வரிசைகட்டி நின்றன, பச்சை நிற சிக்னலுக்காக. வாலிபர் ஒருவர் வண்டிகளுக்கு இடையே வந்து, காத்துநின்றவர்களிடம் பேசுவதும், பிறகு நடைமேடையில் ஏறிக் கொள்வதுமாக இருந்தார்.

‘கல்லூரிக்கு போக வேண்டும் அவசரம் லிப்ட் பிளீஸ்’ என்பது அவரது கெஞ்சலாக இருந்தது. ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளாமல், சிக்னல் கிடைத்தவுடன் சீறிச் சென்று கொண்டே இருந்தனர்.

முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், விலை உயர்ந்த பைக்கில் அந்த சிக்னலில் வந்து நின்றதும், அவரிடமும் அதே கெஞ்சலில் வாலிபர் லிப்ட் கேட்க, மனிதாபிமானம் கொண்ட அவர் ஏற்றிக் கொண்டார்.

பரபரப்பான காலைப் பொழுதில் அந்த சாலையில் வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது. வாலிபர் கூறிய கல்லூரி அந்த சிக்னலில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருந்தது. ஆனால் போக்குவரத்து நெருக்கடியால் எப்படியும் அரை மணி நேரம் ஆகிவிடும் என்பது தெரிந்தது.

‘பைக்’ கிளம்பி சிறிது தூரம் சென்றதும், ‘ரொம்ப நன்றி சார்’ என்ற வாலிபர், ‘‘சார், நீங்க போலீஸா?’’ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். ‘‘இல்லை’’ என்ற இளைஞர் வண்டியை ஓட்டுவதிலே கவனமாக இருந்தார்.

‘‘இல்லை சார், கம்பீரம், கட்டிங் எல்லாம் பார்த்தா போலீஸ்காரர் மாதிரி இருக்கீங்க’’ என்று புகழ்ந்தார், வாலிபர்.

‘‘இல்லைங்க… நான் வழக்கமா இப்படித்தான் முடிவெட்டிக் கொள்வேன்’’ என்று பேச்சுக்கு அவர் முற்றுப்புள்ளிவைத்தார்.

வண்டி நான்கைந்து கிலோமீட்டர் ஓடியிருந்தது. அடுத்த சிவப்பு சிக்னலில் வண்டியை நிறுத்தி காத்திருந்தனர். இன்னும் இரண்டு சிக்னல் தாண்டினால் கல்லூரி வந்துவிடும்.

அப்போது அந்த சிக்னலின் அருகே ஒரு இளம்பெண் நடந்து வந்தாள். முதுகில் அழகான பையை தொங்கவிட்டிருந்தாள். பைக்கின் பின்னால் இருந்த இளைஞன் அந்த பெண்ணை பெயர் சொல்லி அருகே அழைத்தான்.

அவள் அருகில் வர, ‘‘நீ இன்னும் கல்லூரிக்குப் போகலையா?’’ என்றான். அவள், ‘‘இல்லை ஸ்கூட்டி பஞ்சர் ஆயிடுச்சு. நடந்துதான் போகவேண்டும்’’ என்றாள்.

‘‘சார் ரொம்ப நல்லவர், நீயும் ஏறிக்கோ, சீக்கிரம் போயிடலாம்’’ என்றவன், பைக் உரிமையாளர் பதில் சொல்லும் முன்பே அவசரமாக வண்டியில் இருந்து கீழே இறங்கினான். அவள் சற்றும் யோசிக்காமல், காலை இரண்டு புறமும் போட்டபடி பின்னால் ஏறிக்கொண்டாள். ஜீன்ஸ் டீசர்ட் அணிந்திருந்தாள். அவள் நடுவில் மாட்டிக்கொள்ள, அவன் அவளுக்கு பின்னால் ஏறிக்கொண்டான்.

பைக் ஓட்டுபவர் எதுவோ சொல்ல விரும்ப, அதற்குள் சிக்னல் விழுந்தது. பின்னால் ஒரே ‘ஹார்ன்’ சத்தம். அவரும் வண்டியை கிளப்பினார். அவளோ முழுவதுமாக அவர் மீது சாய்ந்துகொண்டாள். அவ்வப்போது, ‘‘ஏன் இப்படி நெருக்குகிறாய்?’’ என்று பின்னால் இருப்பவனிடம் கூறவும் செய்தாள்.

அவள் மூச்சுக்காற்று பைக் ஓட்டுபவரின் பின் கழுத்தில் வீசியது. அவள் அவ்வப்போது அவரது கழுத்தையும் கெட்டியாக பிடித்தாள். அவருக்கு சில நேரங்களில் அந்தரத்தில் பறப்பதுபோல் இருந்தது.

‘இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே சுகமாக பயணிக்கலாமே!’ என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதே கல்லூரி வந்துவிட்டது. ஓரங்கட்டினார். இருவரும் குதித்து இறங்கி ‘தேங்க்ஸ்’ சொல்லிவிட்டு, கல்லூரிக்குள் கரைந்து போனார்கள்.

அவர் அடுத்து அரை மணி நேரம் பயணம் செய்து, அலுவலகத்தை அடைந்தார். அங்கு போன பின்புதான், கழுத்தை தடவினார், அணிந்திருந்த 4 சவரன் சங்கிலி காணாமல் போயிருந்தது.

கல்லூரி வாசலில் ஒரு வாரம் கால் கடுக்க நின்ற பின்புதான் அவர்கள் இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள் இல்லை என்பது தெரிந்தது.

பைக்கில் போறீங்களா? உங்கள் கழுத்துக்குகூட யாராவது இப்படி குறி வைக்கலாம்!

Previous articleஇந்த வீடியோ பாருங்க செக்ஸ் மூடு தானாக வரும்
Next article6 ஆண்டுகளாக 3,000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி சிறுமியின் கண்ணீர் கதை..