Home ஆரோக்கியம் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுவது பிரச்னையா?

35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுவது பிரச்னையா?

17

பெரும்பாலனவர்களுக்கு 21 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும். சிலருக்கு 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒழுங்கற்ற மாதவிலக்கா என்ற சந்தேகம் வருவது இயல்பு.

பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை, பெண்ணுக்கு 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதாவது, கருத்தரிக்க ஏதுவாக, சினைப்பையில் முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்.

கடந்த மாதம் கரு உருவாகாததால், கரு தங்கி வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் உருவாகியிருந்த எண்டோமெட்ரியம் என்ற மெத்தைபோன்ற அமைப்பு வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

இன்றைய சூழலில், பெண்களுக்கு அதிக வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால், அந்த மாதவிலக்கு பாதிப்படைகிறது. இரவுநேர வேலை, சரியாக தூங்காதது, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை ஹார்மோன்களை பாதிக்கிறது.

அவரவர் உடம்புக்கு என ஒரு மாதவிடாய் சைக்கிள் இருக்கும். அது மாறாமல் தொடர வேண்டும். 21 நாள்களுக்கோ, 35 நாள்களுக்கோ ஒருமுறை வந்துகொண்டிருந்த மாதவிடாய், திடீரென்று 40 நாள்கள் தள்ளியோ அல்லது இஷ்டத்துக்கு மாறி வந்தால், உடம்பில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம்.

அப்போது, தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை, பாலிசிஸ்டிக் ஓவரிக்கான ஸ்கேன், கொலாஸ்டின் ஹார்மோன் டெஸ்ட் போன்ற மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

ஒரு பெண்ணுக்கு வருடத்துக்கு 11 முதல் 13 மாதவிலக்குகள் வந்தால், ‘ஷீ இஸ் ஃபைன்’ என்று அர்த்தம். சிலருக்கு 10 நாள்கள், 12 நாள்களிலேயே மாதவிடாய் ஆகும். இதுவே ‘அப்நார்மல்’.

ஆனால், பெரிய மனுஷியான முதல் வருடத்திலிருந்தே 7 நாள்களில் மாதவிடாய் வரும். இது நார்மல்தான். அப்போது, 2 முதல் 7 நாள்கள் வரை மாதவிடாய் ஆவது என்பது அவரவர் குடும்ப மரபணுவைப் பொறுத்தது. இதில் பயப்பட ஒன்றுமில்லை.