Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உடற்பயிற்சிகள்

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உடற்பயிற்சிகள்

19

பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஜிம்மில் தொடக்க நிலையில் ஒட்டுமொத்த உடலையும் வலுவாக்குவதற்கான பயிற்சிகள் மட்டும்தான் சொல்லித் தரப்படும். பிற்பாடு தோள்பட்டை, கைகள், இடுப்பு, தொடைப்பகுதி, கால்கள் என உடலின் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கேற்றி, வலுவாக்குவதற்கான பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் ஜிம் ட்ரெய்னரின் ஆலோசனையுடன் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம். சில வகைப் பயிற்சிகள் காம்போவாக இருக்கும்.

அதாவது இந்தப் பயிற்சியை செய்தால் இன்னொரு பயிற்சியையும் செய்ய வேண்டும் என்பதாக இருக்கும். இன்னும் சில பயிற்சிகள் எதிரெதிரானதாக இருக்கும். குறிப்பிட்ட பயிற்சியால் ஏற்படும் அதீத விளைவை அல்லது எதிர்விளைவைக் கட்டுப்படுத்த இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்பதாக இருக்கும். எக்ஸ்பர்ட்களுக்குத்தான் இது குறித்து நன்கு தெரிந்திருக்கும். எனவே, ஒவ்வொரு உறுப்புக்குமான பிரத்யேகப் பயிற்சிகளை உரிய நிபுணர்கள் ஆலோசனையுடன் செய்வது நல்லது.

நம் உடலின் மொத்த எடையையும் தாங்குவன கால்கள்தான். இடுப்புக்கு மேலே என்னதான் வொர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்து, கட்டுமஸ்தாக உடலைப் பராமரித்தாலும் கால்களுக்கு அதைத் தாங்கும் அளவுக்குத் திறன் வேண்டும். எனவே, கால்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகள் செய்ய மறக்க வேண்டாம். வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங், நீச்சல் பயிற்சிகள் கால்களை வலுவாக்குகின்றன. இதைத் தவிரவும் ஜிம்மில் கால்களையும் தொடைப்பகுதிகளையும் வலுவாக்குவதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. ட்ரெய்னரின் ஆலோசனையுடன் அந்தப் பயிற்சிகளையும் செய்வது நல்லது.