Home ஆரோக்கியம் சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க சில டிப்ஸ்…

சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க சில டிப்ஸ்…

27

captureசிலருக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் இப்பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். அதுவும் வறட்சியான சருமம் கொண்டவர்கள், அதிகமாக இப்பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். இதற்காக எத்தனையோ மாய்ஸ்சுரைசர்களை மாற்றியும் இருப்பார்கள். ஆனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. மாறாக, நிலைமை மோசமாகித் தான் இருக்கும்.

இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வுகளை எளிதில் காணலாம். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க உதவும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதனை தினமும் பின்பற்றினால், சரும வறட்சி நீங்கி, அரிப்புக்கள் தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை கற்றாழை ஜெல் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை மென்மையாக்கும் சக்தியைக் கொண்டவை. எனவே தினமும் இரவில் படுக்கும் போது, சருமத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி வர, சரும வறட்சி தடுக்கப்பட்டு, அரிப்புக்களும் நீங்கும்.

வைட்டமின் ஈ வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சருமத்தில் தடவி வந்தாலும், வறட்சியினால் ஏற்படும் சரும அரிப்புக்களை முழுமையாகத் தடுக்கலாம்.

பெட்ரோலியம் ஜெல்லி இரவில் படுக்கும் முன், கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி ஊற வைத்து வந்தால், சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

லிப் பாம் உதட்டைச் சுற்றி வறட்சி அதிகரித்தால், அப்பகுதியில் லிப் பாமை உபயோகப்படுத்துங்கள். அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் லிப் பாமைப் பயன்படுத்தினால், வறட்சி தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், வறட்சி நீங்கி, சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கோகோ வெண்ணெய் கோகோ வெண்ணெய் நல்ல நறுமணத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை, சருமத்தை ஆழமாகவும் ஈரப்பசையூட்டும். எனவே உங்களுக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், இரவில் படுக்கும் முன் கொக்கோ வெண்ணெயை சருமத்தில் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.