Home ஆரோக்கியம் காய்ச்சலின் போது உணவு முறைகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

39

download (1)கலோரி :
காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70 கி. புரோட்டீன் உணவை உட்கொண்டால் போதுமானது.

சேர்க்கப்பட வேண்டியவை:
எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியப்பம், ரசம் சாதம், ரொட்டி, பன் ஆகியவற்றைச் சாப்பிடலாம். புரோட்டீன் நிறைந்த முட்டை, தயிர் மற்றும் பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :
அதிகக் காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எளிதில் ஜீரணமாகாத காரணத்தால் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

இதே போல அதிக எண்ணெயில் வறுத்த உணவு வகைகளையும், நார்ப் பொருட்கள் நிறைந்த உணவு வகைகளையும் இவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.

வைட்டமின் :
அதிக அளவு தண்ணீர் ஆகாரம், கஞ்சி ஆகியவை சிறந்தவை. வைட்டமின், தாது உப்புகளும் தகுந்த அளவு கிடைக்கும்படி உணவு அமைதல் நல்லது.

பிற :
மது பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்து விட வேண்டும்.