Home பெண்கள் அழகு குறிப்பு அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

19

skin care tips 1சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது. சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உங்களுக்காக எட்டு டிப்ஸ்கள்…

* வெதுவெதுப்பான நீரில் ‘ஷவர்பாத்’ குளியல் போடுவது நல்லது. அப்போது, உடலின் மேற்புறத்தோலில் காணப்படும் நுண்ணிய துவாரங்களில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்குகின்றன.

* மனஅழுத்தமும் சருமத்தைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க யோகா, பிராணயாமம் போன்றபயிற்சிகள் செய்வது நல்லது. மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக காபி, மதுபானங்கள் போன்றவற்றை அருந்தக்கூடாது.

* குளிக்கும்போது அழுக்கை நீக்கும் தரமான, வீரியம் குறைந்த சோப்பை உபயோகிக்க வேண்டும். தரமான சோப்பு கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களை சிதைத்து சருமத்திற்கு கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது.

* கொழுப்புச்சத்தே இல்லாத உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. இது சருமம் வெளிறிப்போவதற்கு காரணமாகி விடுகிறது. அதனால், போதுமான அளவிற்கு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் தோல் ஈரப்பதமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மீன், முட்டை மற்றும் அவரை, மொச்சை போன்ற நார்ச்சத்துள்ள தானியங்கள், வேர்க்கடலை, பச்சைக் காய்கறிகள் போன்றவை சருமத்துக்குத் தேவையான சத்தான உணவுப் பொருட்களாகும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது தோலில் சுருக்கங்களும், இடுப்பளவு விரிவடைந்தும் விடுகிறது. அதனால், புரதச்சத்துக்கள் நிறைந்த கடலை மற்றும் தானியங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.

* பெரும்பாலானவர்கள் கழுத்தின் அழகில் கவனம் செலுத்துவது இல்லை. அதனால், கழுத்தின் பின்பகுதியில் அதிகப்படியான அழுக்கு தேங்கி விடுகிறது. கழுத்தை அழகாக்க, முகத்திற்கு போடும் ‘ஆன்டியாக்சிடண்ட் சீரம்’ உள்ள கிரீமை பயன்படுத்தலாம். இது, சூரியஒளி படும்போது தோல் கறுப்பு நிறமாக மாறிவிடாமல் பாதுகாக்கிறது.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மது, முகத்தில் உள்ள மெல்லிய ரத்தநாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. சருமத்திற்கு சிறந்த ஆன்டியாக்சிடண்ட் ஆக பணிபுரியும் வைட்டமின் ‘ஏ’ சத்தை தோலில் இருந்து உறிஞ்சுகிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் உண்டாகின்றன. இதைத் தவிர்க்க தினமும் 6 முதல் 8 டம்ளர் வரை நீர் அருந்துவது நல்லது.

* சருமம் இரவில் தான் புத்துணர்ச்சி அடைகிறது. அதனால் தினமும் கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு சீராக நடைபெறும்.
அழகு குறிப்பு, அழகு குறிப்புகள், அழகு குறிப்புக்கள், அழகு குறிப்புகள