Home ஆரோக்கியம் உடல் துர்நாற்றத்தால் அவதியா?

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

30

1366photo11தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் பலவித பயன்கள் மறைந்திருக்கிறது.

தலைக்கு தினமும் தேய்ப்பதில் இருந்து உடம்புக்கு தடவுவது வரை அனைவருக்கும் பொதுவாக பயன்படக்கூடியது தேங்காய் எண்ணெய். அதே சமயம் நமது உடல் நலம் சார்ந்த விடயங்களுக்கும் முக்கியதுவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

பொடுகு மற்றும் முடி உதிர்தல், உடலில் இருந்து வீசும் துர்நாற்றம், குடல் புண் என அனைத்திற்கும் தேங்காய் எண்ணெய் தீர்வாக உள்ளது.

மூட்டு வலி நீங்க

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு மூட்டு மற்றும் தசை வலிகள் ஏற்பட்டுள்ள இடங்களில் மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தசை மற்றும் மூட்டு வலிகளால் நீண்ட காலம் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் தேங்காய் எண்ணெய் மசாஜை செய்து நிவாரணம் பெற்றிடுங்கள்.

உடல் துர்நாற்றத்திற்கு சிகிச்சை

உங்கள் அக்குள் பகுதிகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தடவினால் போதும், உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தால் நீங்கள் சந்திக்க போகும் அவமானங்களை தடுக்கலாம்.

சளி மற்றும் இருமல் நீங்க

நீங்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படியானால் சீமைச்சாமந்தி டீயில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

முடிவு உதிர்வு

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்திலும், முடி வேரிலும் மசாஜ் செய்தால், தலை முடி சிறந்த முறையில் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் அரிப்பு போன்றவைகள் நீங்கும். தலைச்சருமத்திற்கு ஊட்டமளித்து முடி உதிர்தலையும் தடுக்கும்.

சரும சுருக்கத்தை போக்கும்

இயற்கையான மாய்ஸ்சுரைசராக விளங்கும் தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்திடும். அமைதிப்படுத்தும் பண்பை கொண்ட தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், சீக்கிரமே வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடும். குழந்தையை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாரம் இருமுறையாவது மசாஜ் செய்யுங்கள்.

தீக்காயங்களுக்கு சிகிச்சை

உங்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டால், காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சியான ஒன்றை உடனே போடவும். அதன் பின், தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடங்களில் நிறைய ஊற்றிக் கொள்ளவும். வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவவும். சொல்லப்போனால், தழும்புகளை குறைக்கவும் கூட தேங்காய் எண்ணெய் உதவிடும்.

தூக்கமின்னை பிரச்சனையை போக்கும்

நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொண்டால், உடலின் செயற்பாடுகள் சீராகும். இதனால் தேவையான தூக்கத்தை அது தூண்டி விடும்.

காதில் உள்ள அழுக்கை நீக்கும்

நம் அனைவருக்கும் காதில் அழுக்கு சேர்வது இயற்கையே. ஆனால் சில நேரம் அது அதிகமாக சேர்ந்து காதை விட்டு எடுக்க சிரமமாகி விடும். அப்போது ஒரு சொட்டு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். காதிற்குள் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை நேராக ஊற்றுங்கள். இது காதிலுள்ள அழுக்கை தளர்த்தும். இதனால் அது தானாகவே வெளிவந்து விடும்.