Home சமையல் குறிப்புகள் முட்டை தம் பிரியாணி

முட்டை தம் பிரியாணி

35

IMG_3268-300x200தேவையான பொருட்கள்;
முட்டை – 3
பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் மீடியம் சைஸ் -2
தக்காளி – 1
கீரிய பச்சை மிளகாய் – 2
மல்லி,புதினா – தலா 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
ஏலம், பட்டை,கிராம்பு, பிரியாணி இலை – தலா 2
கரம் மசாலா – அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சள், சீரக,மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன் ( முட்டையை ஃப்ரை செய்ய)
எண்ணெய் – 50 மில்லி
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
சாஃப்ரான் – பின்ச் அல்லது லெமன் எல்லோ கரைசல்
உப்பு – தேவைக்கு.

பரிமாறும் அளவு – 2 நபர்கள்.

அரிசியை ஒரு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.முட்டை வேக பாதியாக கட் செய்து வைக்கவும்.

நான்ஸ்டிக்பேனில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டையை ஃப்ரை செய்ய குறிப்பிட்ட மசாலா தூள்கள் சேர்த்து சிறிதும் உப்பும் சேர்த்து பிரட்டி ஃப்ரை செய்து வைக்கவும்

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போடவும்.நறுக்கிய வெங்காயம் போட்டு இளம் சிவப்பாக நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

தக்காளி,மிளகாய், மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு தேவைக்கு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

மிளகாய்,மல்லி,மஞ்சள், கரம் மசாலா தூள் வகை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டவும்.

கெட்டித்தயிர் சேர்க்கவும்.

நன்கு பிரட்டவும்.

ஃப்ரை செய்த முட்டை சேர்க்கவும். சிறிது மூடி சிம்மில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்த்தில் தண்ணீர் கொதிக்க விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து ஊறிய அரிசியை 90 சதவிகிதம் வேக வைத்து வடிக்கவும். கொஞ்சம் அரிசி என்பதால் ஒரளவு வேக வைத்தால் தான் பிரியானி சாஃப்டாக இருக்கும்.

வேக வைத்து வடித்த அரிசியை முட்டை மசாலாவின் மீது பரத்தி போடவும்.பின்ச் சாஃப்ரான் கொஞ்சமாக கொதி நீரில் (அரிசி வடித்த நீரில்)கரைத்து மேலே ஊற்றி விடவும்,ஒரு சிறிய பாதி எலுமிச்சையை பிழிந்து விடவும்.விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் மேலே விடலாம்.
மூடி ஒரு பத்து நிமிடம் சிம்மில் தம் போடவும்.கிரேவி சுண்டும் வரை தம் செய்ய வேண்டும்.அடுப்பை அணைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து திறந்து நன்கு ஒரு போல் முட்டை உடையாதவாறு பிரட்டி சூடாக உடன் பரிமாறவும். ஆனியன் ரைத்தா அல்லது ஒரு ஊறுகாயிடனோ அல்லது ஒரு மல்லித்துவையல் உடனோ பரிமாறினால் சூப்பர். உடன் பொரித்த ப்லைன் அப்பளம் இருந்தாலும் சூப்பர்.