Home ஆரோக்கியம் முதுகுவலிக்கு ஆலோசனை

முதுகுவலிக்கு ஆலோசனை

26

முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ”முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்ஸ இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள

நரம்புகள் மூளையிலிருந்து கை-கால்களுட ன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நர ம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற் படுத்தும்.

காரணங்கள்:

அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வ து, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண் களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற் படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சி யம் குறைவு, குடல் நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமி களின் தாக்குதல் (காய்ச்சல், வை ரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும் புப் புற்றுநோய்ஸ இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.

வயது:

எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாரு க்கும் வரலாம்

கண்டறிவது எப்படி:

சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும் போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலரு க்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சி றிது நேரம் அமர்வது கூட இயலாததாக இருக் கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகு வலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலி ன் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப் பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியா ல் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ ரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.

சிகிச்சைகள்:

ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய் வு, வலிநிவாரணி, நரம்புக்குத்தேவையா ன விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆ லோசனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்ப டியான பாதிப் புக்கு உள்ளானவர்களுக்கு அறுவைசிகிச்சையே நிரந்தர தீர்வைத்தரு ம்.

இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத் தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ள வர்களுக்கு மட்டுமே அளிக்கப்படு வதால் வேறுவிதமான பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.

எவ்வளவு செலவாகும்:

எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆ யிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செல வாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந் து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகு ம். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செல வாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூ லமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனு ம் செய்துகொள்ளமுடியும்.

வராமல் தடுக்க:

நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனி ல் அமர்ந்து வேலை செய் வதைத் தவிர்ப்பது, சே ரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நே ராக நிமிர்ந்து அமர்வ து, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர் ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வதுஸ

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டு வடத்துக்கு பாதிப்பு ஏதும்நேராமல் காக்கும். மே லும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன் றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக் கொள் வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகு வலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள் !”