Home ஜல்சா 43,200 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி, அதிர வைக்கும் நிழலுலக செக்ஸ் ஸ்லேவ் கொடூரம்!

43,200 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி, அதிர வைக்கும் நிழலுலக செக்ஸ் ஸ்லேவ் கொடூரம்!

37

குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணத்திற்காக, குற்ற செயல்களில் ஈடுபடுத்த, பாலியல் தொழில் போன்ற குற்ற செயல்களுக்காக குழந்தைகளை கடத்துகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்.
சமீபத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக உலகையே அதிர வைக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

தப்பி வந்த கார்லா :
மெக்சிகோவைச் சேர்ந்த கார்லா ஜெசிண்டோ என்ற பெண்மணி 2008 ஆம் ஆண்டு, தான் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 16.
அதன் பின்னர் இந்த விஷயம் கேள்விப்பட்டு விஷயம் பரவ, அப்போது பேட்டியெடுக்க பலரும் அணுகினார்கள்.
அவர்களிடத்தில் கார்லா சொன்ன விஷயம் தான் உலகையே அதிர வைத்திருக்கிறது. தான் 12 வயதில் கடத்தப்பட்டதாகவும், 12 வயது முதல் 16 வயது வரை சுமார் 4 வருடங்களில் 43000 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக கூறினார்.

ஏளனச் சிரிப்பு :
இதுமட்டுமல்லாமல் ஒரு நாளில் 30 ஆண்களை திருப்திபடுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டாராம். அந்நேரங்களில் வலியால் துடித்த அழுத போதும் யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை மாறாக தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்.
எதையும் கண்டு கொள்ளாது என்னை கற்பழிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள்.

20 ஆயிரம் பெண்கள் :
தான் கடத்தப்பட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கும் கார்லா, ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பெண்கள் வரை இப்படி சிக்கி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அவர்களை காப்பாற்ற அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தயாராக இல்லை என்பது தான் இதில் அதிர்சியளிக்ககூடிய ஒன்றாக இருக்கிறது.

உறுதி :
தற்போது 25 வயதாகும் கார்லா தான் அனுபவித்த வேதனைகளை எல்லாம் மறந்து விட்டு புதிய மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டாளராக இருக்கும் கார்லா, உலகம் முழுவதும், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களை மீட்க போராடுவேன் என்று உறுதியேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.