Home ஆரோக்கியம் பொது மருத்துவம் வாய்ப்புண்களை சரிப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்

வாய்ப்புண்களை சரிப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்

75

வாய்ப்புண் உண்டாவது சகஜம்தான். குறிப்பாக குழந்தைகளுக்கு உண்டாகும். சத்து குறைப்பாட்டினாலும், மன அழுத்தம்,மற்றும் மரபு காரணமாகவும் வரலாம். அதனைக் குணப்படுத்த உதவும் வழிகள் இங்கே.

வாய்ப்புண்கள் உதட்டின் உட்புறம் வெள்ளையாகவும், சுற்றிலும் சிவந்த நிறத்திலும் உண்டாகும். எந்த உணவும் சாப்பிட முடியாது. வலிக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம் என சொல்லலாம். அந்த மாதிரி சமயங்களில் இந்த வாய்புண்களை எப்படி குணப்படுத்தலாம் என மருத்துவரகள் சொல்லும் குறிப்புதான் இது.

அமில மற்றும் இனிப்பு உணவுகள்:
அமில உணவுகள் இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தும். இனிப்பான உணவுகள் இந்த கொப்புளங்களில் பாக்டீரியாக்களை பெருகச் செய்யும். இதனால் அதன் தீவிரம் அதிகமாகும். ஆகவே இந்த இரண்டையும் தவிருங்கள்.டூத்பேஸ்ட் மாற்றுங்கள் :
டூத் பேஸ்ட்டில் சோடியம் லாரைல் சுல்ஃபேட் , நுரை வருவதற்காக சேர்ப்பார்கள். இவை கொப்புளங்களை அதிகமாகும். வாய்ப்புண் ஆறுவதற்கு தாமதமாகும். புதினா கலந்த டூஸ்பேஸ்டை சேருங்கள்.

பூண்டு உப்பு நீர் :
பூண்டுசாறு கலந்த உப்பு நீரை வெதுவெதுப்பான கொண்டு வாய் கொப்பளியுங்கள். இவை அந்த சமயத்தில் எரிச்சல் தந்தாலும் விரைவில் குணப்படுத்தும். கொப்புளத்தை காய வைக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைட் :
ஹைட்ரஜன் பெராக்ஸைட் திரவத்தை நீரில் மூன்றில் ஒரு பங்கு கலந்து கொப்பளிப்பதால் சிறந்த பலன் தெரியும். இது உப்பு நீரைப் போல் எரியாது. ஆனால் நல்ல பலன் தரும். இது சிறந்த முறையாகும்.

சமையல் சோடா :
அதிக அமிலத்தன்மையாலும் வாயில் கொப்புளங்கள் உண்டாகும். இதனை சம நிலைப்படுத்த சமையல் சோடாவைக் கொண்டு கொப்பளிக்கும்போது கொப்புளங்கள் ஆறி உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.