Home பாலியல் உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு பிறப்புறுப்பில் புண், எரிச்சல் ஏற்படுவதன் காரணங்கள்?

உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு பிறப்புறுப்பில் புண், எரிச்சல் ஏற்படுவதன் காரணங்கள்?

566

சிலருக்கு உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், புண் அல்லது வீக்கம் போன்று ஏற்படும். இது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். வயதாக, வயதாக சில பெண்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இளம் வயது பெண்களுக்கு இது ஏற்படுவதற்கான காரணம் தரமற்ற ஆணுறை பயன்படுத்துவது, கிளர்ச்சி ஏற்படும் முன்னரே உறவில் ஈடுபடுவது போன்றவையாக இருக்கக் கூடும்.

பால்வினை நோய், மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சில நோய்களின் காரணமாக கூட உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், புண் அல்லது வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, இவ்வாறு எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது….

உராய்வின்மை

பெண்களுக்கு வயதாக வயதாக பெண்ணுறுப்பு பகுதியில் உராய்வுதன்மை குறைய ஆரம்பிக்கும். இதற்கு மாதவிடாய் கூட ஓர் காரணமாக கருதப்படுகிறது. இதனால், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல், புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அழற்சி

உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு எரிச்சல் அல்லது புண் ஏற்படுவதற்கு காரணம் அழற்சியாக இருக்கக் கூடும். தரமற்ற ஆணுறையின் காரணமாக கூட இவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சிலருக்கு விந்தணு அழற்சியினால் கூட இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

சுகாதாரம்

சுகாதாரம்
இது போன்ற அழற்சி உள்ளவர்கள் பிறப்புறுப்பு பகுதியை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக பெண்கள் தங்களது பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுப் போன்ற எரிச்சல், புண் அவர்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

பால்வினை நோய்

பால்வினை நோய் தாக்கம் இருந்தால் கூட இதுப் போன்ற எரிச்சல் மற்றும் புண் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே, நீண்ட நாட்களாக இவ்வாறு இருக்கிறது எனில் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

நோய்

இடுப்பு அழற்சி நோய் (pelvic inflammatory disease), நார்த்திசுக் கட்டிகள் (fibroid tumors), மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய் ( irritable bowel syndrome), மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) போன்ற பிரச்சனைகள் கூட இதுப் போன்று எரிச்சல் மற்றும் புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

கிளர்ச்சி அடையாதிருப்பது

கிளர்ச்சி அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுவதால் கூட எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் கிளர்ச்சி அடைய 2 நிமிடங்கள் போதும், ஆனால் பெண்கள் கிளர்ச்சி அடைய 15 – 20நிமிடங்கள் ஆகும்.

இதர காரணங்கள்

பெண்ணுறுப்பு தசை இறுக்கமாக இருப்பது, மாதவிடாய் பிரச்சனை போன்றவை கூட இதற்கான வேறுசில காரணங்களாக கருதப்படுகிறது