Home ஆரோக்கியம் பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா?

பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா?

41

தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை ‘யூரினரி இன்கான்டினன்ட்ஸ் எனப் படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால் சிறு நீரைக் கட்டுப்படுத்த முடியாது. தும்மினாலோ, இருமினாலோகூட வெளிப்படும். 40 வயதுக்கு மேல் தாண்டிய பல பெண்களை இப் பிரச்சனை வாட்டி வதைக்கிறது. வெளியில் சொல்லாமல் விடுவதால் பெரிய இன்னல்களுக்கு ஆளாகின் றனர். டென்ஷன், விலை உயர்ந்த புடவை கட்டு வதில் சிக்கல், தாம்பத்யத்தில் விரிசல் என இந்த பாதிப்பின் விளைவுகள் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.‘யூரினரி கான்டின ன்ட்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு

இருமல், தும்மலின் போது தன்னை அறியாமல் சிறுநீர் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் அவஸ்தை படும் பெண்கள் பலர் இதைப் பற்றிப் பேசவே தயங்குகின்றனர்.

குழந்தை பிறப்புக்குப் பின்னர் தான் இப்பிரச்னை தாக்குகிறது. குழந்தை பிறப்பின் போது விரிவ டையும் உடல் பின்னர் சுருங்கும். முறையான பயிற்சி செய்யவில்லையென்றால் 40 வயதுக்கு மேல் இந்த பாதிப்பு எட்டி பார்க்கிறது. பெண்ணின் உறுப்பு பகுதியில் உள்ள தசைகள் நுண்மையானவை. அவை வி ரைவில் சுருங்கும் தன்மை கொண்ட வை அல்ல. இதனால் குழந்தை பிறப்பு க்கு பின்னர் வயிற்று தசை சுருங்குவத ற்கு பிரத்யேக பயிற்சிகள் இருப்பதுபோ ல அந்த பகுதியில் உள்ள பெல்விக்புளோ ர் இறுகவும் பயிற்சிகள் உள்ளன. இதை மருத்துவரின் ஆலோசனை பெற்று பெண் கள் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி குடல் இறக்கம் பிரச்னை உள்ளவர்களு க்கும் இந்த தொந்தரவு வரலாம். ஏனெனி ல் குடல் பகுதியானது சிறுநீர்ப்பையை அழுத்துவதன் காரணமாக அடிக்கடி சிறு நீர் கழிக்கும் எண்ணம் வரலாம். மேலும் சிறுநீரகதொற்று, உறுப்பு பகுதியில் ஏற் படும் தொற்று, கர்ப்பபை புண் உள்ளிட்ட பல காரணங்களா லும் இது ஏற்படலாம்.

சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடிக் கடி போக வேண்டும் என்ற உணர்வு, தன் னையும் அறியாமல் சிறுநீர் வெளியேறும் பெண்கள் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெ னில் இது பெண்களுக்கு மன அழுத்தத் தை ஏற்படுத்துகிறது. வெளியில் செல்லும் போது அசவுகரியமான உணர்வை ஏற்படுத்தும். நீண்ட தூர பய ணம் பெரிய அவஸ்தையாய் அமையும். விலை உயர்ந்த புடவையை உடுத்திக் கொண்டு செல்வதற்கும் தடையாய் இருக்கும். தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்படுத்தக் கூட வழி செய்து விடும். எனவே ஆரம்ப கட்டத்திலேயே கண்ட றிந்து மருத்துவம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் பிசியோ தெரபிஸ்ட் ரம்யா.

பாதுகாப்பு முறை:

இந்த பிரச்னைக்கு முக்கிய தீர்வு உடற் பயிற்சிதான். பாதிப்பு துவங்கும் காலத்தி லேயே உறுப்பு பகுதிக்கான பயிற்சிகளை செய்தால் தடுக்க முடியும். சிறுநீர் கழிக் கும்போது நிறுத்தி நிறுத்தி கழிக்கவேண் டும். இதன் மூலம் தசை சுருங்கி விரியும்.

இரண்டு தொடைகளுக்கும் இடையில் தலையணையை வைத்து அழத் துவதன்மூலம் தசை சுருங்கி வி ரியும். இதுபோல் இன்னும் சில பயிற்சிகள் உள்ளன. அவற்றை முறையாக மூன்று மாதங்களுக் கு செய்தால் மாற்றங்கள் தெரியு ம். வழக்கமான உடற்பயிற்சி யை செய்யும்போது மூச்சை அடக்கி செய்ய வேண்டும். இந்தப் பயிற் சியை மூச்சை அடக்காமல் இயல்பாக செய்யலா ம். குழந்தை பிறந்த உடன் பெல்விக்புளோர் பயி ற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதிக உடல் எடை மற்றும் தொப்பை போன்ற காரணங்களாலும் சிறுநீர் பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது.

ரெசிபி

ஓட்ஸ்அடை:

ஓட்ஸ்மாவு ஒரு கப், கடலை மாவு ஒரு கப் எடு த்து கொள்ளவும். முட்டைக்கோஸ், குடைமிள காய், கேரட் ஆகிய வற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், கரு வேப்பிலை கொத்த மல்லி ஆகியவற்றை பொடியாக நறு க்கவும். வெட்டி வைத்த காய் கறி, வெங்காயம், கருவேப்பி லை, கொத்தமல்லி ஆகியவற் றை மாவில் கலந்து பிசையவும். இதனை தோசைக் கல் லில் அடை போல வார்த்து சாப்பிடலாம். இதில் புரதத்துடன் நார் சத்தும் நிறை ந்துள்ளது.

முளைப்பயறு பிரைட் ரைஸ்:

பச்சைப்பயறு, கொள்ளு, சுண்டல், பட்டாணி ஆகியவற்றை முளை கட்டி எடுத்து கொள்ளவும். பாசும தி அரிசியில் உப்புசேர்த்து தனியா க வேக வைக்கவும். பச்சை மிள காய், இஞ்சி இரண்டையும் பேஸ்ட் டாக அரைத்துக்கொள்ளவும். குடை மிள காய் மற்றும் வெங்காயத் தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட் உடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, போட்டு எண்ணெயில் வதக்கவும். இத்துடன் சோயா சாஸ் சேர்த்து முளைப்பயறு வகைகளை சேர்க்கவும். பின் வேக வைத்த பாசுமதி அரிசியையும் சேர்த்து கிளறி பிரைடு ரைசாக சாப்பி டலாம். இதிலிருந்து அதிகளவு புரோட் டீன் கிடைக்கும்.

கருவேப்பிலை சேமியா:

சேமியாவை நெய்யில் வறுத்து, தே வையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த் து வேகவைத்துக்கொள்ளவும். ஒரு கப் கருவேப் பிலை, தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், புளி சேர்த்துவதக்கி அரைத்துக் கொள்ளவும். வா ணலியில் கடுகு தாளித்து அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த சேமி யாவையும் மிக்ஸ் செய்தால் கருவேப்பிலை சேமி யா தயாராகி விடும். இதில் நார்சத்து மற்றும் இரு ம்பு சத்து கிடைக்கிறது.

டயட்

உடலில் தண்ணீரின் அளவு குறையும் போதும், சோடியம், பொட்டா சியம் ஆகிய உப்புகளின் அளவு அதிகரிக் கும் போதும் சிறுநீர் பிரச்சனைகள் பெண் களுக்கு உண்டாகும். சத்தான உணவுக ளை எடுத்துக் கொள்ளாதபோது இது போ ன்ற தொல்லைகள் தாக்க வாய்ப்புள்ளது. உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க் கவும். புளி, தக்காளி ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்க ளுக்கு சிறுநீர் பிரச்னை ஏற்படும். புரதம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவது அவசியம். இளநீர், பழங்கள், கோசாப்பழம், வெள்ள ரிக்காய், மோர், தயிர், பால், முட்டை, கே ழ்வரகு, கம்பு, சுண்டல் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ள கீரை, முழு தா னியங்களை உணவில் சேர்ப்பது அவ சியம். முழுமையான சத்துகள் உடலு க்கு கிடைக்கும்போது பலவீனங்க ளை தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

ஒரு கைப்பிடி அருகம்புல்லை தண்ணீரில் போட் டுக் கொதிக்க வைத்து பால் மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை உறுதிப் படும்.

ஆதொண்டை இலையை மோர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து தினமும் 60 மில் லி அளவுக்கு குடித்து வந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் நன்கு பிரியும்.

ஆலமரப் பூக்களின் காம்புகளை நிழலில் உலர் த்திப் பொடியாக்க வும். இதனை வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

ஆவாரம் பூ, நாவல் கொட்டை, சிறுகுறிஞ்சான் & மூன்றையும் சம அளவில் எடுத்துப்பொடிசெய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிவது குணமாகும்.

ஆனைக் கற்றாழை வேரைப் பொடி செய்து, தினமும் நான்கு சிட்டிகை அளவுக்கு சாப்பிட் டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இலைக்கள்ளி இலையை வதக்கி அடி வயிற்றில் பற்றுப் போட்டால் சிறுநீர் நன்கு பிரியும்.

உருத்திர சடை விதையை அரைத்து சாப்பிட்டால் நீர்கடுப்பு பிரச் சனை இருக்காது.

உருளைக் கிழங்கு வேக வைத்த தண்ணீரை வடி கட்டி குடித்து வந்தால் நீர் சுருக்கு, நீர்கடுப்பு, நீர் அடைப்பு குணமாகும்.

உளுந்தை தண்ணீரில் ஊற வைக்கவும். மறு நாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறை மோரில் கலந்து குடித் தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செ ய்து தின மும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் தீரும்.

கல்யாண முருங்கை கீரையுடன் சிறிதளவு பார்லி சேர்த்து அரைத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் எரிச்ச ல் குணமாகும்.