Home ஆரோக்கியம் பொது மருத்துவம் சிறுநீரகத்திலுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும் அற்புதமான பானம்..!

சிறுநீரகத்திலுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும் அற்புதமான பானம்..!

32

நாம் காலையில் எழுந்திருக்கும் போது நமது உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்தால் முழு நாளும் சிறப்பானதாக அமையும்.

இதில் காலையில் நம் உடலிற்குத் தேவையான சக்தியை தரும் பானத்தைப் பற்றி கூறவுள்ளோம்.

அதிகமான சக்தி கிடைத்தால் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. உடலிற்கு புத்துணர்ச்சி தரும் பானத்தை தினமும் வீட்டில் இலகுவாக தயாரிக்க முடியும்.

சக்தி தரும் பானத்தை ஒலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சப்பழத்தில் தயாரிக்கலாம்.

ஒலிவ் எண்ணெய்

கிரேக்கர்களும் உரோமர்களும் ஒலிவ் எண்ணெய்யை திரவத் தங்கம் என் கூறுவார்கள்.

இடில் உள்ள கொழுப்பு அமிலம் உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் நச்சுத் தன்மையை நீக்க வல்லது.

இதில் காணப்படும் விட்டமின், கனியுப்புக்களால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது.

எலுமிச்சப்பழம்

எலுமிச்சப்பழம் பற்றி அனைவரும் நன்கறிந்ததே.

இதில் உள்ள விட்டமின் சி, பொட்டாசியம், பொஸ்பரஸ், விட்டமின் பி, புரோட்டின், மாப்பொருட்கள் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சியை வழங்குகின்றது.

ஒலிவ் எண்ணெய் எலுமிச்சப்பழத்தின் சேர்வையால் ஏற்படும் நன்மைகள்

1.மலச்சிக்கல்

சமிபாட்டுத் தொகுதியின் தசைச் சுவர்களை மிருதுவாக்குகின்றது. கல்லீரல், ஈரலின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றது.

இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் தன்மை நச்சுத் தன்மையை வெளியேற்றி, சமிபாட்டை சீராக்குகின்றது.

2. இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

இதில் உள்ள கொழுப்பமிலம் உடலில் கெட்ட கொழுப்பை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது.

3. ருமாட்டிக் சிக்கல்
தினமும் இதனை அருந்தி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மூட்டு வலிகளில் இருந்து நிவாரனம் தருகின்றது. இந்த பானத்தை காலையில் வெறு வயிற்றில் குடிப்பதே சிறந்தது.

4. ஈரல் கல்லீரலைப் பாதுகாத்தல்.

தினமும் காலையில் உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால், ஈரல், கல்லீரல், சிறுநீரகத்தில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி பாதுகாக்கின்றது