Home ஜல்சா நடிகை த்ரிஷா ஓரினச்சேர்க்கையாளரா ? சட்டம் அங்கீகரித்தால் மகிழ்ச்சி

நடிகை த்ரிஷா ஓரினச்சேர்க்கையாளரா ? சட்டம் அங்கீகரித்தால் மகிழ்ச்சி

237

ஜல்சா செய்திகள்:இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதே சமயம், இயற்கைக்கு மாறான வகையில் ஒரு பாலின உறவினை சட்டபூர்வமாக அனுமதிக்க கூடாதென ஒரு சாராரும் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கிற வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பல சாரார் வரவேற்று கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், “ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அரசு அங்கீகரித்தது குறித்து மகிழ்ச்சி; அனைவருக்கும் சமஉரிமை கிடைத்துள்ளது; இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய உள்ளது.. ஜெய் ஹோ” என ஓரினச்சேர்க்கைக்கான அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா.