Home இரகசியகேள்வி-பதில் நாங்கள் கட்டில் உறவு முடிந்த உடன் எழும்புவதால் விந்து வெளியேறுகிறது இது சரியா?

நாங்கள் கட்டில் உறவு முடிந்த உடன் எழும்புவதால் விந்து வெளியேறுகிறது இது சரியா?

755

இரகசியகேள்வி-பதில்:என் மகளுக்கு வயது எட்டுதான் ஆகிறது. அதற்குள் மார்பகங்கள் டீன் ஏஜ் பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. தர்மசங்கடமாக இருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இருந்து அவளைக் காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை உண்டா? -டி. ஆனந்தி, சென்னை.

நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. உங்கள் மகளின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது உங்கள் மகளும் சீக்கிரமே வயதுக்கு வரலாம். அவளது மார்பக வளர்ச்சியைக் குறைக்க நினைக்காதீர்கள். அது இயற்கை. அதை ஒரு பெரிய விஷயமாக்கி அவளிடம் பேசாதீர்கள். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலை மறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.

————————————
என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
————————————————–
நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமான புத்தகங்களையும், படங்களையும் காட்டி அதிலுள்ளது போல என்னை சம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

தன் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையை மனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம் என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிற போது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாக மாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.
————————————————
எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை. மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கரு தங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள் உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம் பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்ன கோளாறாக இருக்கும்? என்ன சிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

பொதுவாகத் திருமணமாகி, ஒன்றி ரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன் பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள் கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவது இயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போது சிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகா விட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும் தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக் குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும் அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டை உருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்த பத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும் தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரி உறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும் போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
——————————–